மழைகாலங்களில் தேள்,பூரான் போன்ற விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகமாவே இருக்கும்.இதுபோன்ற விஷ பூச்சிகள் கடித்தால் அவை உடலில் பல பாதிப்புகளை ஏற்படுத்தும்.
தேள் கொட்டினால் எப்படி வலிக்குமோ அதேபோல் போன்று தான் தேள் கொட்டினாலும் வலி ஏற்படும்.தேள் கடியை சீக்கிரம் குணப்படுத்திவிட முடியும் என்றாலும் அதிக விஷம் கொண்ட தேள் கொட்டினால் உயிருக்கு பாதமாகிவிடும்.
தேள் கடி எப்படி இருக்கும்?
தேள் கொட்டிய இடத்தில் அதீத வலி ஏற்படும்
சம்மந்தப்பட்ட இடத்தில் தடிப்பு ஏற்படும்
தேள் கொட்டிய சிறிது நேரத்தில் வாந்தி உணர்வு மற்றும் உடல் நடுக்கம் ஏற்படும்
தேள் கடிக்கு சிறந்த கை மருந்து:
தேவையான பொருட்கள்:
1)அவுரி இலை
2)மோர்
3)கறிவேப்பிலை
பயன்படுத்தும் முறை:
முதலில் ஒரு கைப்பிடி அவுரி இலை மற்றும் கால் கைப்பிடி கறிவேப்பிலை இலையை சுத்தம் செய்து உரலில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.
பிறகு இதை ஒரு கிண்ணத்தில் போட்டு சிறிதளவு மோர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.இதை தேள் கடி மீது காலை,மாலை,இரவு என மூன்று வேளையும் பூசினால் விஷ முறிவு ஏற்படும்.
தேவையான பொருட்கள்:
1)இந்துப்பு
2)பசு நெய்
பயன்படுத்தும் முறை:
அடுப்பில் வாணலி வைத்து ஒரு தேக்கரண்டி பசு நெய் சேர்த்து சூடுபடுத்திக் கொள்ளவும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி இந்துப்பு போட்டு நன்றாக வறுக்கவும்.
பிறகு இதை ஆறவிட்டு மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்து தேள் கடித்த இடத்தில் பூசினால் விஷம் முறையும்.
தேவையான பொருட்கள்:
1)வில்வாதி குளிகா
பயன்படுத்தும் முறை:
இந்த வில்வாதி குளிகா நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.தங்களுக்கு தேவையான அளவு வாங்கி வந்து தேள் கடித்த இடத்தில் பயன்படுத்தினால் விஷம் முறிந்துவிடும்.
தேவையான பொருட்கள்:
1)எலுமிச்சை விதை
2)கல் உப்பு
பயன்படுத்தும் முறை:
ஒரு தேக்கரண்டி அளவு எலுமிச்சை விதை சேகரித்து உப்பு சேர்த்து அரைத்தெடுக்கவும்.பிறகு இதை வெது வெதுப்பான நீரில் கலந்து பருகினால் தேள் கடி விஷம் முறிந்துவிடும்.
தேவையான பொருட்கள்:
1)புளியங்கொட்டை
பயன்படுத்தும் முறை:
ஒரு புளியங்கொட்டையை கல்லில் உரசி சூடாக்கி தேள் கடித்த இடத்தில் வைத்தால் விஷ முறிவு ஏற்படும்.