Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உடனே விண்ணப்பியுங்கள்! தமிழக கூட்டுறவு சர்க்கரை ஆலையில் வேலை

Jobs in Chennai

Jobs in Chennai

உடனே விண்ணப்பியுங்கள்! தமிழக கூட்டுறவு சர்க்கரை ஆலையில் வேலை

தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் ஆய்வுகூட இரசாயனர் பணிக்கான காலிபணிஇடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பங்களை இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடைந்து கொள்ளலாம் .

வேலைவாய்ப்பிற்கான தகுதி

அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைகழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.SC டிகிரி தேர்ச்சி பெற்று இருக்கவேண்டும்.

இப்பணிக்கான விண்ணப்பதாரர்களின் அதிக பட்ச வயதானது 30 என வரையறை செய்யப்பட்டுள்ளது. மேலும் வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

காலி பணி இடங்கள்

ஆய்வுகூட இரசயனர் பதவிக்கு 4 காலி பணிஇடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஊதிய விபரம்

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.7400-120-8600-125-9850-130-13100/- ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை

இப்பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 03.11.2022ம் தேதிக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது .

Exit mobile version