இதை தடவினால் மங்கு, தேமல் ஒரே நாளில் மறைந்துவிடும்!
சருமத்தில் எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக தேமல், மங்கு போன்றவை இருந்தால் அதை விரைவில் குணமாக்கி கொள்ள வேண்டும். இல்லையென்றால் அவை அதிகளவில் பரவி தொந்தரவு கொடுத்துவிடும்.
*அரிசி மாவு
*லெமன் சாறு
ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் அரிசி மாவு மற்றும் இரண்டு ஸ்பூன் லெமன் சாறு கலந்து மங்கு மற்றும் தேமல் உள்ள இடத்தில் தடவி வந்தால் அவை விரைவில் மறையும்.
*எலுமிச்சை சாறு
*அதிமதுரம்
*காய்ச்சாத பால்
ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி வெயிலில் ஒரு நாள் வரை காயவிட்டு எடுத்துக் கொள்ளவும்.
இந்த எலுமிச்சம் பழத்தை முகத்தில் தேய்த்து மஜாஜ் செய்யவும். பிறகு ஒரு கிண்ணத்தில் காய்ச்சாத பால் மற்றும் தேவையான அளவு அதிமதுரப் பொடி சேர்த்து கலக்கி மங்கு, தேமல் உள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் கழித்து குளித்தால் அவை விரைவில் சரியாகும்.
*முல்தானி மெட்டி
*பன்னீர் ரோஜா இதழ்
*பன்னீர்
*ஆவாரம் பூ
பன்னீர் ரோஜா இதழ் மற்றும் ஆவாரம் பூ… இதை இரண்டையும் நன்கு உலர்த்தி பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு கிண்ணத்தில் 1 ஸ்பூன் முல்தானி மெட்டி, 1 ஸ்பூன் பன்னீர் ரோஜா மற்றும் ஆவாரம் பூ பொடி சேர்த்து கலந்து விடவும்.
பிறகு அதில் ரோஸ் வாட்டர்(பன்னீர்) ஊற்றி குழைத்து மங்கு, தேமல் உள்ள இடத்தில் தடவி வந்தால் அவை விரைவில் குணமாகிவிடும்.