Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஒல்லியான கண் புருவம் அடர்த்தியாக காட்சி தர இந்த எண்ணெயை அங்கு அப்ளை செய்யுங்கள்!!

Apply this oil on thin eyebrows to make them look thicker!!

Apply this oil on thin eyebrows to make them look thicker!!

ஒல்லியான கண் புருவம் அடர்த்தியாக காட்சி தர இந்த எண்ணெயை அங்கு அப்ளை செய்யுங்கள்!!

ஆண்,பெண் அனைவருக்கும் கண் புருவம் அடர்த்தியாக இருந்தால் தான் அழகு.புருவம் அழகாக இருந்தால் தான் முகம் பார்க்க அழகாக தெரியும்.

கண்களுக்கும்,முகத்திற்கும் அழகு சேர்க்கும் கண் புருவத்தை அடர்த்தியாகவும்,கருமையாகவும் வளர வைக்க இந்த எண்ணெயை புருவத்திற்கு பயன்படுத்தி வாருங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)கற்றாழை ஜெல்
2)விளக்கெண்ணெய்
3)தேங்காய் எண்ணெய்
4)சின்ன வெங்காயச் சாறு

செய்முறை:-

ஒரு கற்றாழை மடலை தோல் நீக்கி விட்டு அதன் ஜெல்லை தனியாக பிரித்து எடுத்துக் கொள்ளவும்.இதை ஒரு கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி அலசி சுத்தம் செய்து கொள்ளவும்.

பிறகு இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு மைய்ய அரைத்துக் கொள்ளவும்.அதன் பின்னர் 1/4 தேக்கரண்டி விளக்கெண்ணெய் மற்றும் 1/4 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும்.

பிறகு ஒரு சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்.இந்த வெங்காய சாற்றை எண்ணெயில் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

இந்த எண்ணெயை கண் புருவத்தின் மீது தடவி சில நிமிடங்கள் மஜாஜ் செய்யவும்.இரவு நேரத்தில் இந்த எண்ணெயை புருவத்திற்கு பயன்படுத்தி வந்தால் கூடிய விரைவில் பலன் கிடைக்கும்.

Exit mobile version