பூனை, எலி கடி குணமாக இந்த தைலத்தை அங்கு தடவுங்கள்!

0
193
#image_title

பூனை, எலி கடி குணமாக இந்த தைலத்தை அங்கு தடவுங்கள்!

சிலர் பூனை, எலியை செல்ல பிராணிகளாக வளர்த்து வருகின்றனர். சிலரது வீட்டில் அழையா விருந்தாளியாக பூனை, எலி உள்ளிட்டவைகள் வந்து செல்லும். ஒருவேளை இந்த பிராணிகள் கடித்தால் உடலில் பல வித பிரச்சனைகள் ஏற்படும்.

பூனை, எலி கடித்த இடத்தில் இரத்தம் கசிவு, அரிப்பு, கொப்பளங்கள் உள்ளிட்டவைகள் ஏற்படும். இந்த பூனை, எலி கடி குணமாக வீட்டில் உள்ள பொருட்களை வைத்து தைலம் தயார் செய்து பயன்படுத்தி வரலாம்.

தேவைப்படும் பொருட்கள்:-

*கீழாநெல்லி – 1/2 கப்

*கொம்பு மஞ்சள் – 1 துண்டு

*ஓமம் – 1 தேக்கரண்டி

*நல்லெண்ணெய் – 100 மில்லி

செய்முறை…

முதலில் 1 துண்டு கொம்பு மஞ்சளை எடுத்து அரைத்து பொடியாக்கி கொள்ளவும். அதேபோல் ஓமத்தை இடித்து பொடியாக்கி கொள்ளவும்.

பின்னர் 1/2 கப் கீழாநெல்லி செடியை அரைத்து விழுதாக்கி வைத்துக் கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் ஒரு இரும்பு வாணலி வைத்து அதில் 100 மில்லி நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். எண்ணெய் சூடானதும் பொடித்து வைத்துள்ள மஞ்சள் மற்றும் ஓமத்தை சேர்க்கவும்.

அடுத்து அரைத்து வைத்துள்ள கீழாநெல்லி விழுதை சேர்த்து மிதமான தீயில் நன்கு காய்ச்சி அடுப்பை அணைக்கவும்.

இந்த தைலத்தை ஆறவைத்து ஒரு பாட்டிலில் ஊற்றி சேமித்து வைத்துக் கொள்ளவும். இந்த தைலத்தை பூனை, எலி கடித்த இடத்தில் தடவி வந்தால் அவை விரைவில் குணமாகும்.