கொசு, விஷ பூச்சிகளின் கடியில் இருந்து தப்பிக்க இதை தோல் மீது பூசுங்கள்!
விஷ பூச்சிகளின் கடியில் இருந்து தப்பித்துக் கொள்ள செலவு இல்லாத மருந்து தயாரிப்பது குறித்து விளக்கப்பட்டுள்ளது.
1)திருநீற்று பச்சிலை
2)துளசி
3)நொச்சி இலை
4)தேங்காய் எண்ணெய்
செய்முறை…
*முதலில் 1/4 கப் திருநீற்று பச்சிலை, 1/4 கப் துளசி மற்றும் 1/4 கப் நொச்சி இலை எடுத்துக் கொள்ளவும்.
*இதை அனைத்தையும் சம அளவு எடுத்து தண்ணீர் விட்டு அரைத்து விழுதாக்கி கொள்ளவும்.
*இந்த விழுதில் இருந்து கிடைக்கக் கூடிய சாற்றை மட்டும் பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.
*இந்த சாற்றை எண்ணையில் காய்ச்ச வேண்டும். அதற்கு அடுப்பில் ஒரு வாணலி வைத்து 1/4 கப் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
*எண்ணெய் சூடானதும் அரைத்து எடுத்து வைத்துள்ள மூலிகை இலை சாற்றை ஊற்றி கொதிக்க விடவும்.
*தேங்காய் எண்ணெயில் மூலிகை இலை சாறு நன்கு கொதித்து நிறம் மாறியதும் அடுப்பை அணைத்து விடவும்.
*எண்ணெயை நன்கு ஆறவிட்டு ஒரு ஈரமில்லாத பாட்டிலில் ஊற்றி சேமித்துக் கொள்ளவும்.
*இந்த எண்ணையை சருமம், தோல் மீது பூசினால் கொசுக் கடி, பூச்சு கடியில் இருந்து எளிதில் தப்பித்துக் கொள்ளலாம்.