Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இரவோடு இரவாக குதிகால் வெடிப்பு மறைந்து போக.. ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணையுடன் இந்த பொருளை சேர்த்து வெடிப்பில் பூசுங்கள்!!

கால் பாதங்களுக்கு அழுத்தம் கொடுப்பதாலும் பனி,கால்கள் அதிக நேரம் தண்ணீரில் இருத்தல் போன்ற காரணங்களாலும் வெடிப்பு ஏற்படுகிறது.இதனால் அரிப்பு,எரிச்சல் போன்ற தொந்தரவுகளை சந்திக்க நேரிடுகிறது.

அது மட்டுமின்றி குதிகாலில் வெடிப்பு உண்டானால் அவை அழகை கெடுத்துவிடும்.எனவே இந்த குதிகால் வெடிப்பை மறைய வைக்க இங்கு சொல்லப்பட்டுள்ள இயற்கை குறிப்பை பின்பற்றுங்கள்.

குதிகால் வெடிப்பு வர காரணங்கள்:-

1)குளிர்காலம்
2)கால் பாத அழுத்தம்
3)அதிக நேரம் தண்ணீரில் இருத்தல்
4)கால் பாத பராமரிப்பின்மை
5)கெமிக்கல் பயன்பாடு

தேவையான பொருட்கள்:-

1)தேங்காய் எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
2)எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி
3)கிளிசரின் – ஒரு தேக்கரண்டி
4)மஞ்சள் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

**முதலில் பாத்திரம் ஒன்றில் வெது வெதுப்பான தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.பிறகு அதில் கால்களை வைத்து 10 முதல் 15 நிமிடங்களுக்கு ஊறவிட வேண்டும்.

**பிறகு ஒரு வேஸ்ட் டூத் பிரஷ் இருந்தால் அதை கொண்டு குதிகால் வெடிப்பை தேய்க்க வேண்டும்.பிறகு தண்ணீர் கொண்டு கால்களை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

**அடுத்து கால்களை நன்றாக துடைத்துவிட்டு சிறிது தேங்காய் எண்ணெயை கால்கள் வெடிப்பு மீது தடவிக் கொள்ள வேண்டும்.

**அதன் பின்னர் கால் வெடிப்பை போக்கும் பேஸ்ட் ஒன்றை தயாரிக்க வேண்டும்.அதற்கு ஒரு கிண்ணம் எடுத்துக் கொள்ள வேண்டும்.அதில் ஒரு தேக்கரண்டி அளவு கஸ்தூரி மஞ்சள் பொடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

**அடுத்து ஒரு தேக்கரண்டி கிளிசரின் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.பின்னர் ஒரு எலுமிச்சம் பழத்தை கட் செய்து அதில் இருந்து சாறு எடுத்து மஞ்சள் கலவையில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

**பிறகு இதை பேஸ்ட் பதத்திற்கு நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.பின்னர் இதை குதிகால் வெடிப்பு மீது அப்ளை செய்து நன்றாக காயும் வரை காத்திருக்க வேண்டும்.

**பிறகு வெது வெதுப்பான நீரில் கால்களை வைத்து 10 நிமிடங்கள் ஊறவைத்து துடைக்க வேண்டும்.இதை தினமும் ஒருமுறை மட்டும் செய்து வந்தாலே போதும்.குதிகால் வெடிப்பு முழுமையாக மறைந்து பாதங்கள் மென்மையாக மாறிவிடும்.

Exit mobile version