Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்தியாவை கவுரவித்த அமெரிக்கா! அமெரிக்கப்பாதுகாப்புத்துறை ஆலோசகராக நியமனம் செய்யப்பட்ட இந்திய வம்சாவளி பெண்!

அமெரிக்கா பல்வேறு விதத்தில் இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் பல நிகழ்வுகளை செய்து வருகிறது.

அதில் குறிப்பிடத்தக்கவை என சில விஷயங்கள் இருக்கிறது. தற்போது அமெரிக்காவின் துணை அதிபராக இருந்து வருபவர் கமலா ஹாரிஸ் அவர் இந்திய வம்சாவழியைச் சார்ந்தவர் என்பதும், மேலும் அவர் தமிழகத்தைச் சார்ந்தவர் என்பதும் பெருமைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

இதற்கெல்லாம் முன்னதாகவே இந்தியாவில் தமிழகத்தை சார்ந்த சுந்தர் பிச்சை உலகின் மிகப்பெரிய அமெரிக்காவின் நிறுவனமான கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சுந்தர் பிச்சை அவர்களை பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்திற்கு வந்து விடவேண்டும் என்று பணிவுடன் அழைப்பு விடுத்தாலும் அவர் தொடர்ந்து கூகுள் நிறுவனத்திற்காகவே பணியாற்றி வந்தார்.

அதோடு இதனை கவனித்த கூகுள் நிறுவனத்தின் தலைமை அவருக்கு கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி என்ற பதவி உயர்வை வழங்கி தன்னுடனேயே வைத்துக் கொண்டது.

அந்த வகையில் தற்சமயம் அமெரிக்க துணை அதிபரின் பாதுகாப்பு ஆலோசகராக இந்திய வம்சாவழியைச் சார்ந்த சாந்தி சேத்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்க கடற்படையின் முன்னாள் அதிகாரியான இவர் கடந்த 2010 முதல் 2012 ஆம் ஆண்டு வரையில் அமெரிக்க போர்க்கப்பல் கமாண்டராக பணியாற்றியவர், அதோடு ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

ஆனால் அமெரிக்கா இந்தியாவிற்கு அதாவது தன்னுடைய நாட்டை ஆளும் ஒரு நபர் இந்தியாவை சார்ந்தவராக இருக்க வேண்டும் என்ற அளவிற்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பதின் உள்நோக்கம் என்ன என சற்றே கூர்ந்து யோசிக்கவேண்டும்.

அதாவது இந்தியாவைப் பொருத்தவரையில் ரஷ்யாவுடன் நீண்ட காலமாக நட்பு பாராட்டி வருகிறது. அது வெறும் நட்புடன் மட்டும் நின்றுவிடவில்லை ரஷ்யாவிடமிருந்து பலதரப்பட்ட பாதுகாப்பு வாகனங்கள், பாதுகாப்பு தளவாடங்கள், உள்ளிட்டவற்றையும் மத்திய அரசு வாங்கி வருகிறது.

அதோடு மட்டுமல்லாமல் இந்தியாவின் பல இக்கட்டான சூழ்நிலைகளில் உற்ற தோழனாக இந்தியாவின் பக்கம் நின்று எதிரிகளை துவம்சம் செய்வதில் ரஷ்யா வல்லமை பெற்றது என்பது அனைவரும் அறிந்தது தான்.

ஆனால் தற்சமயம் அமெரிக்கா என்ன நினைக்கிறதென்றால், எப்படியாவது இந்தியாவை தன்வசம் இழுத்து விட வேண்டும் என்று அந்த நாடு கருதுகிறது. அதாவது ரஷ்யா மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளிடையே இருக்கின்ற நட்பை முறித்து தற்போது ரஷ்யா இருக்கின்ற இடத்திற்கு அமெரிக்கா வந்து விடவேண்டும் என நினைக்கிறது அந்த நாடு.

இதனை பலமுறை வெளிப்படையாகவே தெரிவித்துள்ளது அமெரிக்கா. ஆனாலும் இவற்றை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை இந்திய நாடு.

இருப்பினும் எப்படியாவது இந்தியாவிடம் நெருங்கி விடவேண்டும் என்று அந்த நாடு கடுமையான முயற்சியை மேற்கொண்டு வருகிறது.

ஆனால் பல சமயங்களில் நம்முடைய எதிரி நாடுகளுடன் இணைந்து நம்மையே தாக்க துணிந்ததுதான் அமெரிக்கா என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை.

ஆனால் தற்சமயம் காலத்தின் கட்டாயத்தால் இந்தியாவிடம் நட்பு பாராட்ட வேண்டும் என்று நினைக்கிறது அமெரிக்கா.

அதற்காகவே தான் தற்சமயம் அமெரிக்கா தன்னுடைய அரசியல் அரங்கில் இந்தியர்களை முன்னிலைப்படுத்தி வருகிறது என சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

Exit mobile version