ஹிந்தியில் உருவாகும் சூரரைப் போற்று! ரிலீஸ் அடுத்த வருஷமா!!

0
102

ஹிந்தியில் உருவாகும் சூரரைப் போற்று! ரிலீஸ் அடுத்த வருஷமா!!

 

தமிழில் நடிகர் சூரியா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று திரைப்படம் தற்போது ஹிந்தியில் உருவாகி வருகிறது. இந்த  நிலையில் சூரரைப் போற்று திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் அடுத்த வருடம் அதாவது 2024ம் வருடம் தான் ரிலீஸ் ஆகப்போகிறது என்று தகவல்கள் கிடைத்துள்ளது.

 

இயக்குநர் சுதா கொங்கரா அவர்களின் இயக்கத்தில் நடிகர் சூரியா நடிப்பில் கடந்த 2020ம் ஆண்டு உருவான திரைப்படம் சூரரைப் போற்று. இந்த திரைப்படம் நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. அமேசான் ஓடிடி தளத்தில் சூரரைப் போற்று திரைப்படம் வெளியாகி இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

 

ஜிவி பிரகாஷ் குமார் இசையில் உருவான சூரரைப் போற்று படத்தில் இடம் பெற்ற ‘காட்டுப் பயலே’ பாடல் ரசிகர்கள் மத்தியில் வைரலானது. 2டி எண்டெர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்த சூரரைப் போற்று படத்திற்கு பல பிரிவுகளில் தேசிய விருதுகளும் வழங்கப்பட்டது. இந்நிலையில் சூரரைப் போற்று திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் ஆகி வருகின்றது.

 

தமிழில் உருவாகி வெளியான சூரரைப் போற்று திரைப்படத்திற்கு கிடைத்த நல்ல வரவேற்பை அடுத்து சூரரைப் போற்று திரைப்படம் தற்பொழுது இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் ஹிந்தியில் உருவாகி வருகின்றது.

 

ஹிந்தி மொழியில் உருவாகி வரும் சூரரைப் போற்று திரைப்படத்திற்கு ஸ்டார்ட்அப் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஹிந்தி மொழியில் உருவாகும் சூரரைப் போற்று திரைப்படத்தின் ரீமேக் திரைப்படமான ஸ்டார்ட் அப் திரைப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அக்சய் குமார் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும் நடிகை ராதிகா மதன், நடிகர் பரேஷ் ராவல் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

 

இதையடுத்து ஸ்டார்ட்அப் திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் வெளியாகும் என்று பேசப்பட்டு வந்த நிலையில் ஸ்டார்ட்அப் திரைப்படத்தை அடுத்த வருடம் வெளியிடுவதற்கு படக்குழு முடிவுசெய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இன்னும் ஸ்டார்ட்அப் திரைப்படத்தின் படப்பிடிப்பு மீதம் இருப்பதாலும், இறுதிக்கட்ட பணிகள் நடைபெற இன்னும் சில நாட்கள் தேவைப்படும் என்பதாலும் படக்குழு இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.