Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வயது 30 கிட்ட நெருங்கிடுச்சா? இனி இளமை திரும்ப இந்த அழகு குறிப்புகளை பாலோ செய்யுங்க!!

முன்பெல்லாம் 40 வயதை கடந்த பிறகு தான் முதுமை தோற்றம் எட்டி பார்க்க தொடங்கும்.ஆனால் இக்காலத்தில் 30 வயது தாண்டுவதற்குள் முதுமை தோற்றத்தை பலரும் அடைந்துவிடுகின்றனர்.நமக்கு முதுமை தோற்றம் ஏற்பட்டு விட்டது என்பதை சருமத்தில் ஏற்படும் மாற்றத்தை வைத்து தெரிந்து கொள்ளலாம்.

தோல் சுருக்கம்,முடி நரைத்தல் போன்றவை முதுமை தோற்றத்தின் ஆரம்ப அறிகுறியாகும்.அதேபோல் சருமத்தில் மெல்லிய கோடுகள்,சருமப் புள்ளிகள் போன்றவை வயதான தோற்றத்திற்கான அறிகுறியாகும்.

முதுமை ஏற்படுவது இயற்கையான விஷயம்.பிறந்த அனைவரும் முதுமை தோற்றத்தை நிச்சயம் அடைவர்.இருப்பினும் இளம் வயதில் முதுமை தோற்றம் ஏற்படுகிறது என்றால் அலட்சியம் செய்யாமல் உரிய தீர்வு காண வேண்டும்.

இளம் வயதில் முதுமை தோற்றத்திற்கான காரணங்கள்:

*சுற்றுச்சூழல் மாசுபாடு
*மன அழுத்தம்
*தூக்கமின்மை
*உடல் பருமன்
*ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம்
*இரசாயன அழகு சாதனப் பயன்பாடு

30+ வயது உள்ளவர்கள் இளமை தோற்றத்தை தக்கவைத்துக் கொள்ள பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:

1)முதலில் உணவுமுறை பழக்கத்தை மாற்ற வேண்டும்.நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

2)ஆரஞ்சு,ஆப்பிள்,மாதுளை போன்ற பழங்களில் அரைத்து ஜூஸ் செய்து பருக வேண்டும்.திமமும் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் பருக வேண்டும்.சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ள தண்ணீர் அவசியமான ஒன்றாகும்.

3)கொலாஜன் நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும்.தினமும் சூரிய ஒளி படும்படி நடைபயிற்சி செய்ய வேண்டும்.

4)ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.சருமத்திற்கு இரசாயன அழகு சாதனப் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்த்துவிட்டு இயற்கை பொருட்களை பயன்படுத்துங்கள்.

5)பழங்களை கொண்டு பேசியல் மசாஜ் செய்யுங்கள்.தினமும் ஏதேனும் ஒரு பழத்தை சாப்பிடத் தொடங்குங்கள்.

7)மன அழுத்தம்,மனச் சோர்வு ஏற்படாமல் இருக்க தியானம்,யோகா செய்யுங்கள்.தங்களுக்காக நேரத்தை ஒதுக்கி பிடித்த விஷயங்களை செய்து மன மகிழ்வு அடையுங்கள்.உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள ஆரோக்கிய உணவுக் கட்டுப்பாட்டை பின்பற்றுங்கள்.

Exit mobile version