Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவசம்!! வெளியாகவுள்ள அசத்தல் அறிவிப்பு?!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவசம்!! வெளியாகவுள்ள அசத்தல் அறிவிப்பு?!

புதுச்சேரியில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச உணவு பொருட்கள் வழங்கும் திட்டத்திற்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.

புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ரங்கசாமி முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்பு தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் புதுச்சேரி அமைச்சரவை சார்பில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு உணவு பொருட்கள் இலவசமாக வழங்குதல் மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு பண்டிகை பொருட்கள் இலவசமாக வழங்குதல் என பல்வேறு திட்டங்களுக்கான கோப்புகளை புதுச்சேரி துணைநிலை ஆளுநரை தமிழிசை சவுந்தரராஜன் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

தற்போது, இந்த கோப்புகளில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் வழங்கியுள்ளதாக ஆளுநர் மாளிகை செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version