Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கும்பம் – இன்றைய ராசிபலன்! மகிழ்ச்சியாக இருக்கும் நாள்!!

Aquarius – Today's Horoscope!! The day when thoughts turn into colors!

Aquarius – Today's Horoscope!! The day when thoughts turn into colors!

கும்பம் – இன்றைய ராசிபலன்! மகிழ்ச்சியாக இருக்கும் நாள்!! கும்பராசி அவர்களே ராசி அதிபதி சனி பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்து கொண்டு மகிழும் நாள். சந்திர பகவான் அயன சயன ஸ்தானம் ஆகிய விரைய ஸ்தானத்தில் இருப்பதால் சிறுசிறு பிரயானங்கள் மூலம் விருந்துகள் உண்டாகும்.

 

குடும்ப உறவு சுபிட்சமாக உள்ளது. கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேர்ந்தாலும் செலவுகளும் கூடவே வந்து சேரும். உத்தியோகத்தில் பணியிட மாறுதல் சிலருக்கு உறுதியாகும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக சில பயண வாய்ப்புகள் உண்டாவதால் அதன் மூலம் ஆதாயம் வந்து சேரும்.

 

அரசியலில் இருக்கும் நண்பர்கள் பயணங்கள் மேற்கொள்வார்கள். கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்கள் வெளியூர் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வார்கள்.

 

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் சந்தோஷமான சூழ்நிலைகளில் பயணிப்பார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

 

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் இருந்து வந்த குழப்பமான சூழ்நிலை மறைந்து சந்தோசமான சூழ்நிலை நிலவும். மூத்த வயது சேர்ந்த அன்பர்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி அடைவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு சந்தோஷமான செய்தி வந்து சேரும்.

 

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பல வண்ண நிற ஆடை அணிந்து எம்பெருமான் விநாயகப் பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Exit mobile version