ஹனிமூனில் ஸ்ட்ரிட் ஆர்டர் போட்ட ஏ.ஆர் ரஹ்மான்!! வேறு அறைக்கு மனைவியை அனுப்பி வைத்த சுவாரஸ்ய தகவல்!!

0
147
AR Rahman in the spell of music while on honeymoon! His wife in another room

A.R.Rahman: ஏ.ஆர்.ரஹ்மான், திருமணமாகி தனது மனைவியுடன் ஹனிமூனுக்கு சென்றபோது கூட இசையமைக்கும் பணியை செய்ததாக நடிகர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

சினிமாவில் மிகவும் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் தான்  ஏ.ஆர்.ரஹ்மான். இவர் தனது தொழிலில் மிகவும் பக்தியாக இருப்பவர். 1999-ஆம் ஆண்டு வந்த சங்கமம் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக இருந்தார். இவர்  2 ஆஸ்கர் விருதுகளையும் வாங்கியுள்ளார்.

ஆனால் இவர் 1992-இல் வெளியான ரோஜா படத்தில் தான் உலகில் அறிமுகமாகினார். இதனை தொடர்ந்து பல படங்களில் இவர் இசையமைத்து முதல் இடத்தை பிடித்தார். 1999-ஆம் ஆண்டு சங்கமம் படத்திற்கு நடிகரான ரஹ்மான் ஒரு பேட்டியில் ஏ.ஆர்.ரஹ்மான் பற்றி குறிப்பிட்டிருந்தார். அவரின் செயல்கள் வித்தியாசமாக இருக்கும். ஏ.ஆர்.ரஹ்மானுக்கு 1995-ம் ஆண்டு சாய்ரா பானு என்பவருடன் திருமணம் நடந்தது.

அப்போது அவர் தனது மனைவியுடன் ஹனிமூனுக்கு சென்றார்.  நடிகரான ரஹ்மான் கால் செய்து அண்ணி “ரஹ்மான் எங்கே” என கேட்டபோது அவர் இங்கு இல்லை வேறு ஒரு அறையில் பாடல் வாசித்து கொண்டிருக்கிறார் என கூறியுள்ளார். அவர் அந்த அளவுக்கு இசை மீது காதல் கொண்டுள்ளார். மேலும் இவர் தனியாக இருக்க விரும்புவர். எந்த ஒரு மூடத்தனமான நம்பிக்கையும் ஏற்க மாட்டார்.

அதே போன்று ரஹ்மான் இன்னொரு செய்தியும் கூறியிருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் தனது தந்தையின் போராட்டங்களைக் கண்டபோதுதான் மத மாற்ற யோசனையை சிந்தித்தாக கூறினார். அதை தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் ஒவ்வொருவருக்கும் ஒரு இருண்ட காலங்கள் உள்ளது, யார் என்ன செய்கிறோம், எப்போது இருண்ட உலகிற்கு செல்வோம் என யாருக்கும் தெரியாது என கூறியிருந்தார். அதேபோல் எங்களுக்கு யாரும் மத நம்பிக்கையை திணிக்கவில்லை அது அவரது தனி உரிமை என ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார் .