Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நடிகர் வடிவேலுக்கு டஃப் கொடுக்கும் அறந்தாங்கி நிஷா!! வைரலாகும் வீடியோ!!

Aranthangi Nisha gives duff to actor Vadivelu !! Video goes viral !!

Aranthangi Nisha gives duff to actor Vadivelu !! Video goes viral !!

நடிகர் வடிவேலுக்கு டஃப் கொடுக்கும் அறந்தாங்கி நிஷா!! வைரலாகும் வீடியோ!!

அறந்தாங்கி நிஷா ஒரு இந்திய நடிகர் மற்றும் மேடை நடிகை ஆவார். இவர் தமிழ் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி துறையில் பணியாற்றி வருகிறார். இவர் ஜாக்லின் மற்றும் ரக்ஷன் தொகுத்து வழங்கிய குரேஷி உடன் இணைந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு சீசன் 5 நிஷா தனது நகைச்சுவைகள் வெளிப்படுத்தி வந்தார்.

மேலும் அதைத் தொடர்ந்து தனுஷ், விஷால், ரோபோ ஷங்கர் கேத்ரினா தெரசா, நிக்கிகல்ராணி மற்றும் வித்யா பிரதீப் போன்ற பிரபல நடிகர்களுடன் இணைந்து இப்படத்தில் நடித்துள்ளார். அதை தொடர்ந்து கலகலப்பு 2 மற்றும் இரும்புத் திரை போன்ற சில பிரபலமான படங்களிலும் தோன்றினார். மேலும் அவர் சமுத்திரக்கனி மற்றும் ரம்யா பாண்டியன் உடன் இணைந்து ஆண் தேவதை திரைப்படத்தில் நடித்தார். பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியை விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளர் ஆன மா கா பா ஆனந்துடன் இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார்.

 

மேலும் இவர் அண்மையில் ஆரம்பமான பிக்பாஸ் ஜோடிகள் நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். இந்த நடன நிகழ்ச்சிகள் பழங்கள் ஜோடி சேர்ந்து வாரம்தோறும் ஒரு கான்செப்ட்டில் நடனம் ஆடி வருகின்றனர். அந்த வகையில் அவர் தற்போது வைகைப்புயல் வடிவேலு போல் வேடமணிந்து ஒரு வீடியோவினை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் இந்த வேடமும் அடுத்த வாரம் நடக்கவிருக்கும் நடன நிகழ்ச்சியை பொறுத்து இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அந்த வீடியோவில் வடிவேலு அவர்களின் வசனங்களை பேசி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்பொழுது அந்த வீடியோ அவரது ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

Exit mobile version