Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அறந்தாங்கி தபால் நிலையம் எதிரில் சாலையில் தேங்காய் உடைத்து போராட்டம்!

Aranthangi post office in front of the road breaking coconut protest!

Aranthangi post office in front of the road breaking coconut protest!

அறந்தாங்கி தபால் நிலையம் எதிரில் சாலையில் தேங்காய் உடைத்து போராட்டம்!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தபால் நிலையம் அருகில் தமிழ்நாடு தென்னை விவாசயிகள் சங்கம் சார்பாக மட்டை நீக்கிய தேங்காய் கிலோ 50-க்கும் கொப்பரை கிலோ 150க்கும் விலை நிர்ணயம் செய்து அரசே கொள்முதல் செய்திட வலியுறுத்தி சாலையில் தேங்காய் உடைத்து பேராட்டம்.

அறந்தாங்கி தபால் நிலையம் எதிரே தென்னை விவசாயிகள் தேங்காய் உடைக்கும் போராட்டத்தில் பல்வேறு கோரிக்கையை வைத்து தேங்காய் உடைத்து போராட்டம். மட்டை நீக்கிய தேங்காய் கிலோ 50 ரூபாய்க்கும் கொள்முதல் செய்ய வேண்டும், கொப்பரை தேங்காய் கிலோ 150-ரூபாய்க்கு கொள்முதல் செய்திட வேண்டும்.தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் அங்கன்வாடி மையங்களுக்கும் தேங்காய் எண்ணெய் பயன்படுத்திட ஆணை வழங்க வேண்டும்.

அனைத்து ரேசன் கடைகளுக்கும் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்கிடு அறந்தாங்கி உள்ள ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய வேண்டும்.உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி தேங்காய் தபால் நிலையம் எதிரே 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலையில் தேங்காய் உடைத்து போராட்டம் நடத்தினர்.

Exit mobile version