டெல்லியின் மாஸ்டர்: மூன்றாவது முறையாக முதல்வர் பதவியேற்கும் அரவிந்த் கெஜ்ரிவால்!

0
150

டெல்லியின் மாஸ்டர்: மூன்றாவது முறையாக முதல்வர் பதவியேற்கும் அரவிந்த் கெஜ்ரிவால்!

டெல்லியில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 60 க்கும் மேற்பட்ட இடங்களை பிடித்து வெற்றி பெற்றது. முதல்வர் பதவிக்கான பதவிப் பிரமாணத்தை ஏற்க குடியரசு தலைவர் ஆணை பிறப்பித்துள்ளார்.

நாளை மூன்றாவது முறையாக டெல்லியின் முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவி ஏற்கிறார். கடந்த கால அமைச்சரவையில் எந்த மாற்றமும் செய்யாமல் அப்படியே தக்க வைப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குடியரசுத் தலைவர் பிறப்பித்த பதவியேற்பு ஆணையில் பல்வேறு அமைச்சர்களும் பதவி ஏற்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் சத்யேந்தர் ஜெய்ன், மணிஷ் சிசோடியா, கைலாஷ் கெஹ்லோட், கோபால் ராய், இம்ரான் ஹூசைன் மற்றும் ராஜேந்திர கெளதம் ஆகியோர் பதவியேற்க ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

தனது முதலமைச்சர் பதவியேற்பு விழாவிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரசின் சோனியா காந்தி மற்றும் பல முக்கியமான அரசியல் தலைவர்களுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்துள்ளார். டெல்லி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 70 இடங்களிலும் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. பாஜக குறிப்பிட்ட சில இடங்களை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.