Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உலகக் கோப்பை வில்வித்தை போட்டி 2023!! இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம்!!

Archery World Cup 2023!! Gold medal for India in the final!!

Archery World Cup 2023!! Gold medal for India in the final!!

உலகக் கோப்பை வில்வித்தை போட்டி 2023!! இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம்!!
நடப்பாண்டுக்கான உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் இறுதிச் சுற்றில் இந்திய அணிக்கு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.
2023ம் ஆண்டுக்கான உலகக் கோப்பை வில்வித்தை போட்டி(நிலை 2) சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்று வருகின்றது. இந்த போட்டியில் நேற்று நடந்த காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவை சேர்ந்த ஓஜாஸ் டீடேல், ஜோதி சுரேகா வென்னம் ஜோடி தென் கொரியா நாட்டை சேர்ந்த கிம் ஜோங்ஹோ, ஓ யோயூன் ஜோடியை எதிர்கொண்டது.
விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் இந்தியாவை சேர்ந்த ஓஜாஸ் டீடேல், ஜோதி சுரேகா வென்னம் ஜோடி வெற்றி பெற்றது. இவர்கள் 156 – 155 என்ற புள்ளிக் கணக்கில் தென் கொரியா  நாட்டை சேர்ந்த கிம் ஜோங்ஹோ, ஓ யோயூன் இணையை தோற்கடித்து தங்கப் பதக்கத்தை வென்றது. இது போலவே கடந்த மாதம் துருக்கியில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியிலும் இந்திய இணை தங்கப் பதக்கத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.
இது போலவே காம்பவுண்ட் போட்டியில் தனிநபர் பிரிவின்  இறுதிப் போட்டியில் இந்தியாவை சேர்ந்த பிரதமேஷ் ஜவகர் 2 முறை உலக சேம்பியனும் நம்பர் ஒன் வீரரும் ஆன நெதர்லாந்தை சேர்ந்த மைக் கிளாசருடன் மோதினார். இந்தியாவை சேர்ந்த பிரதமேஷ் ஜவகர் நெதர்லாந்தை சேர்ந்த மைக் கிளாசரை 149 – 148 என்ற புள்ளிக் கணக்கில் தோற்கடித்து அதிர்ச்சி கொடுத்தார். 19 வயதான பிரதமேஷ் ஜவகர் நம்பர் 1 வீரர் மைக் கிளாசரை தோற்கடித்து தனது முதல் தங்கப் பதக்கத்தை வென்றார்.
Exit mobile version