Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அடேங்கப்பா இத்தனை நாட்கள் வங்கி விடுமுறையா? ஆர்பிஐ அதிரடி அறிவிப்பு!! 

Are all these days a bank holiday? RBI Action Announcement!!

Are all these days a bank holiday? RBI Action Announcement!!

அடேங்கப்பா இத்தனை நாட்கள் வங்கி விடுமுறையா? ஆர்பிஐ அதிரடி அறிவிப்பு!!

ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்தில் பல மாற்றங்கள்  உள்ளது என்று மத்திய அறிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதம் 2023 ஆண்டுக்கான விடுமுறை நாட்களை இந்தியா ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஏற்கனவே வங்கிக்கு 2வது  சனிக்கிழமை மற்றும் 4 வது சனிக்கிழமை விடுமுறை. மேலும் ஒரு மாதத்திற்கு நான்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளிக்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது வந்த அறிவிப்பின் படி ஆகஸ்ட் மாதம் மட்டும் 14  நாள் விடுமுறை அளிக்கப்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. RBI விடுமுறை காலண்டர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன் படி வழக்கம் போல் 2வது  சனிக்கிழமை,  4 வது சனிக்கிழமை விடுமுறை  மற்றும் நான்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை  என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளளது.

ஆகஸ்ட் 8 ஆம் தேதி டென்டாங் லோரம் கேங்டாக்கில் வங்கி இல்ளை மற்றும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி 2 வது சனிக்கிழமை என்று அறிவித்துள்ளது. அதனை தொடர்ந்து ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுகத்திர தினத்தையொட்டி நாடு முழுவதும் வங்கிகள் இயங்காது என்றும் அறிவித்துள்ளது.

இதையடுத்து ஆகஸ்ட் மாதம் 16 ஆம் தேதி பார்சி புத்தாண்டு காரணமாக போலாபூர், மும்மை மற்றும் நாக்பூர் வங்கிகள் இயங்காது. மேலும் ஆகஸ்ட் 18 ஆம் தேதி ஸ்ரீமந்த சங்கரதேவரின் திதி காரணமாக கொளஹத்தியில் வங்கிகள் மூடப்படும். ஆகஸ்ட் 28 ஆம் தேதி முதல் ஓணம் பண்டிகையின் காரணமாக கேரளாவில் வங்கி இயங்காது. ஆகஸ்ட் 30 ரஷா பந்தன் முன்னியிட்டு ஜெய்ப்பூர் மற்றும் ஸ்ரீ நகர் வங்கி மூடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

 

Exit mobile version