Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

குழந்தை பெற்ற தாய்மார்கள் தாய்ப்பால் கொடுப்பதை பாரமாக நினைக்கிறீங்களா? இனி இந்த மிஸ்டேக்ஸ் பண்ணாதீங்க!!

தாய்மார்கள் தங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.குழந்தைகளின் ஊட்டச்சத்து ஆகாரமே தாய்ப்பால் தான்.முன்பெலாம் 2 வயது வரை தாய்ப்பால் குடித்து தான் குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்ந்தார்கள்.

ஆனால் தற்பொழுது உள்ள இளம் தாய்மார்கள் தாய்ப்பால் கொடுப்பதை பாரமாக நினைக்கின்றனர்.சில தாய்மார்கள் தாய்ப்பால் கொடுப்பதையே விரும்புவதில்லை.பாக்கட் பால்,பால் பவுடரில் தயாரிக்கப்பட்ட பாலை டப்பாவில் ஊற்றி கொடுத்துவிடுகின்றனர்.ஆனால் இது குழந்தையின் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கும்.

பிறந்த குழந்தைக்கு ஊட்டச்சத்துக்கள் அவசியமான விஷயமாக உள்ளது.முதல் 6 மாதங்களாவது குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதை உறுதி செய்ய வேண்டும்.காரணம் குழந்தைகளால் உணவை உட்கொள்ள முடியாது.

தாய்ப்பால் நன்மைகள்:

1)குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

2)குழந்தையின் அறிவாற்றல் அதிகரிக்கும்.நோய் தொற்றில் இருந்து குழந்தைகள் எளிதில் மீள்வார்கள்.

3)குழந்தைகள் ஆக்ட்டிவாக செயல்படுவார்கள்.குழந்தைகள் உடல் பருமனாகாமல் இருப்பார்கள்.

குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதால் தாய்மார்களுக்கு கிடைக்கும் நன்மைகள்:

மார்பக புற்றுநோய் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும்.கர்ப்பம் தரித்த பிறகு ஏற்படும் உடல் பருமனை இதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.தாய்ப்பால் கொடுப்பதால் உங்களுக்கு குழந்தைக்கும் இடையேயான பிணைப்பு அதிகரிக்கும்.

அடுத்து உரிய நேரத்தில் தடுப்பூசி செலுத்த வேண்டும்.மருத்துவர் வர சொல்லும் நாட்களில் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும்.குழந்தையின் துணைகளை வெது வெதுப்பான நீரில் போட்டு துவைத்து நன்கு காய வைத்து பயன்படுத்த வேண்டும்.

குழந்தைகள் அடிக்கடி சிறுநீர் கழிப்பார்கள்.அவர்களுக்கு உடுத்தி இருக்கும் துணிகளை அவ்வப்போது மாற்ற வேண்டும்.குழந்தையின் நேரத்தை செலவழிப்பதை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.குழந்தையின் உடல் நலத்தில் அதிக அக்கறை செலுத்த வேண்டும்.

Exit mobile version