Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சியா மற்றும் சப்ஜா இரண்டும் ஒரே விதையா? குழப்பம் தீர இதை தெரிந்து கொள்ளுங்கள்!!

உங்களில் பெரும்பாலானோர் சியா மற்றும் சப்ஜா ஆகிய இரு விதைகளும் ஒன்று தான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.இந்த இரண்டு விதைகளும் தோற்றத்தில் ஒரே மாதிரி இருப்பதனால் தான் இந்த குழப்பம் ஏற்படுகிறது.

சியா,சப்ஜா ஆகிய இரு விதைகளுக்கு இடையே ஏகப்பட்ட வேறுபாடுகள் இருக்கின்றது.இந்த சியா,சப்ஜா விதைகள் ஐஸ்க்ரீம்,ஜூஸ் போன்றவற்றில் சேர்த்து சாப்பிடப்படுகிறது.சப்ஜா விதை திருநீற்றுப்பச்சிலை என்ற மூலிகை தாவரத்தில் இருந்து கிடைக்கும் ஒரு பொருளாகும்.அதேபோல் சியா விதை சால்வியா என்ற தாவரத்தில் இருந்து கிடைக்கும் விதையாகும்.

இந்த இரண்டு விதைகளும் பலுடாக்களில் சேர்க்கப்படுகின்ற காரணத்தினால் இவற்றை பலூடா விதை என்றும் அழைக்கின்றனர்.சியா விதை மற்றும் சப்ஜா விதை ஒரே அளவில் இருக்கிறதால் பலரும் குழப்பமடைகின்றனர்.ஆனால் சியா மற்றும் சப்ஜா விதை நிறம் மற்றும் தோற்றத்தலில் அதிக வித்தியாசத்தை கொண்டிருக்கிறது.

இந்த இரு விதைகளும் புதினா குடும்பத்தை சேர்ந்தவை.சியா விதை ஓவல் வடிவத்திலும் சப்ஜா விதை நீள் வடிவத்திலும் இருக்கும்.சியா விதைகளை ஊறவைத்தால் அவை நீரை உறிஞ்சி அளவில் பெரியதாக நேரம் எடுத்துக் கொள்ளும்.

ஆனால் சப்ஜா விதை சிறிது நேரத்தில் நீரை உறிஞ்சி பெரியதாகிவிடும்.சப்ஜா விதையில் சிறிது துளசி நறுமணம் வீசும்.சியா விதைகளை அப்படியே சாப்பிட முடியும்.ஆனால் சப்ஜா விதைகளை தண்ணீரில் ஊறவைத்து தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த இரண்டு விதைகளும் நமது உடல் எடையை குறைக்க உதவுகிறது.அதிக பசியை கட்டுப்படுத்த உதவுகிறது.சியா விதையில் இருக்கின்ற ஒமேகா 3 கொழுப்பு அமிலம் சருமம் சார்ந்த பிரச்சனைகளை சரி செய்கிறது.

சியா விதையில் இருக்கின்ற நார்ச்சத்து செரிமானத்தை தூண்டுகிறது.இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்க சியா விதைகளை சாப்பிடலாம்.

வயிறு எரிச்சல்,அசிடிட்டி பிரச்சனை குணமாக சப்ஜா விதையை ஊறவைத்து சாப்பிடலாம்.சருமப் பிரச்சனைகளை சரி செய்ய சியா விதைகளை உட்கொள்ளலாம்.கூந்தல் ஆரோக்கியத்தை மேம்படுத்த சப்ஜாவை ஊறவைத்து சாப்பிடலாம்.

உடலில் தேங்கி இருக்கும் நச்சுக் கழிவுகளை அகற்ற சப்ஜா விதைகளை சாப்பிடலாம்.இவை இரண்டும் நமது உடலுக்கு ஆரோக்கிய நன்மைகளை வாரி வழங்குவதால் இரண்டையும் தயங்காமல் எடுத்துக் கொள்ளலாம்.

Exit mobile version