பாத வெடிப்பு பிரச்சனையா? ஒரு வாழைப்பழம் இருந்தால் போதும்!

0
256

பாத வெடிப்பு பிரச்சனையா? ஒரு வாழைப்பழம் இருந்தால் போதும்!

பாத வெடிப்பு பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும் சில பொருட்கள் மட்டும் அதன் வழிமுறைகளை இந்த பதிவு மூலம் காணலாம். பாத வெடிப்பு என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்களுக்கு ஏற்படக் கூடியதாகும். குறிப்பாக பெண்களுக்கு அதிகமாக பாத வெடிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது.

பாத வெடிப்பு ஏற்படுவதால் விரும்பிய காலணிகளை அணிய முடியாமல் அவதிப்படும் நிலை உருவாகிறது.பாதங்களை சரியாக பாரமரிக்காத காரணமாகவே பாத வலிப்பு ஏற்படுகிறது. குதிகாலில் ஏற்படுவதால் இதனை குதிகால் வெடிப்பு என்று கூறலாம்.

சருமத்தின் ஈரப்பதம் குறைவதால் விரிசல் ஏற்பட்டு பாத வெடிப்பு ஏற்படுகிறது. பாத வெடிப்பு தீவிரமடைந்தால் பாக்டீரியா பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. பாத வெடிப்பு அசவுகரியம் தருவதுடன் வலி மற்றும் ரத்தக் கசிவு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

பாதவெடிப்பு ஏற்பட பல காரணங்கள் கூறலாம் ஈரப்பதம் குறைவு வைட்டமின், மினரல் சத்து குறைபாடு நீண்ட நேரம் நிற்பது, வயது சரி நோய், தைராய்டு, நீரிழிவு, சரியான காலனி அணியாதது மரபியல் உடல் வருமன் இவை அனைத்தும் பாத வெடிப்பிற்கான காரணமாகும்.

இதனை எவ்வாறு தடுக்கலாம் என்றால் பாதங்களில் ஈரப்பதத்தை பாதுகாக்க பாத வெடிப்பு ஏற்படாமல் தடுக்கும் சில பொருட்கள் தற்போது காணலாம் .அன்றாடம் சாப்பிடக்கூடிய உணவுகளில் வாழைப்பழம் சேர்த்துக் கொள்வது நல்லதாகும். இதில் வைட்டமின் ஏ உள்ள வாழைப்பழம் சருமத்தின் நீளும் தன்மை மற்றும் ஈரப்பதத்தை பாதுகாக்க உதவும்.

வாழைப்பழத்தை மசித்து பாதங்களில் தடவி 20 நிமிடம் விட்டு கழுவலாம். இயற்கை முறையில் தேன் ஒரு ஆன்டிபயாட்டிக்காக செயல்படுகிறது. பாத வெடிப்பை குணமாக்க உதவுவதோடு சருமத்திற்கு புத்துணர்ச்சி தருகிறது.

தேன் கலந்து வெதுவெதுப்பான நீரில் பாதங்களை ஊறவைத்து 20 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதன் காரணமாக பாத வெடிப்பு ஏற்படுவது குறையும்.