அடங்கப்பா அரசு பள்ளி மாணவர்கள் ரஷ்யா பயணமா? பள்ளிக்கல்வித்துறை சூப்பர் அறிவிப்பு!!
அனைத்து மாநில அரசுகளும் பள்ளி மாணவர்களுக்கு பல திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மேலும் பள்ளி மாணவர்களுக்கு வசதியாக இருக்க அதிரடி அறிவிப்புகளை அந்தந்த மாநில அரசு அடிக்கடி அறிவித்து வருகிறது. தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி, சைக்கிள், புத்தகம், நோட்டு போன்ற பல திட்டங்களை செயல்படுத்திவருகிறது.
மற்ற மாநில அரசுகளும் பள்ளி மாணவர்களுக்கு பல திட்டத்தை அறிவித்தும் செயல்படுத்தியும் வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த பள்ளிக்கல்வித்துறை பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதனையடுத்து அதில் மாநில அளவில் சிறந்து விளங்கும் 25 பேரை தேர்வு செய்து வெளிநாடு சுற்றுலா அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் தமிழக அரசு தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளி மாணவர்களின் அறிவை வளர்க்க மற்றும் அறிவியல் ராக்கெட் சயின்ஸ் என்ற திட்டத்தை தொடங்கி உள்ளது. மேலும் அதற்கு அரசு சார்பில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
அதனியடுத்து மாணவர்களுக்கு மூத்த விஞ்ஞானி சிவதாணு பிள்ளை பயற்சி அளித்தார்.
இதன் மூலம் பயிற்சி பெற்ற 75 மாணவர்கள் வெண்வெளி மையத்தை பார்க்க,மாஸ்கோ செல்ல உள்ளார்கள் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் மாணவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் தமிழக அரசு செய்து தரும் என்று அன்பில் மகேஷ் தெரிவித்தார். அதனை தொடர்ந்து முதல்கட்டமாக 50 பேர் ஆகஸ்ட் 26 ஆ தேதி ரஷ்யா செல்ல உள்ளார்கள்