Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தலைவலி ஒற்றைத் தலைவலி இரண்டு ஒன்றா? இதை தெரிந்து கொள்ள இத்தனை அறிகுறிகள் இருக்கிறதா?

நாம் அனைவரும் ஏதோ ஒரு கட்டத்தில் தலைவலி பிரச்சனையை எதிர்கொள்கிறோம்.மன அழுத்தம்,காய்ச்சல்,தூக்கமின்மை,தலையில் ஏதேனும் பிரச்சனை இருத்தல் போன்ற பல்வேறு காரணங்களால் தலைவலி உண்டாகிறது.தலைவலி பாதிப்பு உடனடியாக குணமாகிவிடும்.ஆனால் ஒற்றைத் தலைவலி பாதிப்பு அதீத வலியை உண்டாக்கும்.தலைவலிக்கும் ஒற்றைத் தலைவலிக்கும் ஒரே மாதிரி அறிகுறிகள் இருந்தால் ஒற்றைத் தலைவலி பாதிப்பு அதிக நேரம் நீடிக்கிறது.

உலகில் சுமார் 12% மக்கள் ஒற்றைத் தலைவலி பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றனர்.சாதாரணமாக கருதப்படும் இந்த ஒற்றைத் தலைவலி தான் உலகில் 3வது பெரிய பாதிப்பு என்றால் நம்புவீர்கள்.இந்த ஒற்றைத் தலைவலி பிரச்சனையை ஆண்களைவிட பெண்கள் தான் அதிகளவு எதிர்கொள்கின்றனர்.

ஒற்றைத் தலைவலிக்கான காரணங்கள்:

1)மன அழுத்தம்
2)தூக்கமின்மை
3)நீரிழப்பு
4)உடல் நலப் பிரச்சனை
5)நரம்பியல் கோளாறு

ஒற்றைத் தலைவலிக்கான அறிகுறிகள்:

1)தலைசுற்றல்
2)குமட்டல்
3)வாந்தி உணர்வு
4)மனச் சோர்வு
5)அடிக்கடி கொட்டாவி வருதல்
6)தலைவலி
7)மனநிலையில் மாற்றம்
8)தூங்குவதில் சிரமம் சந்தித்தல்

ஒற்றைத் தலைவலியின் பொதுவான நிலைகள்:

**புரோட்ரோமல் நிலை
**ஆரா
**தலைவலி
**போஸ்ட்டிரோமல்

முதல் நிலை: புரோட்ரோமல்

இது ஒற்றைத் தலைவலியின் முதல் நிலை ஆகும்.இந்த பாதிப்பு ஏற்பட்டால் சில மணி நேரத்திற்கு நீடிக்கும்.

புரோட்ரோமல் அறிகுறி:

*உடல் சோர்வு
*எரிச்சல் உணர்வு
*அதிகப்படியான கொட்டாவி
*தலைசுற்றல்

இரண்டாம் நிலை: ஆரா

இந்த ஆரா நிலை என்பது கண் மற்றும் நரம்பு சார்ந்த பாதிப்புகளை உள்ளடக்கியது ஆகும்.இந்த ஒற்றைத் தலைவலி தொடங்கி ஒன்று முதல் இரண்டு மணி நேரம் வரை நீடிக்கும்.

ஆரா அறிகுறி:

*மங்கலான கண் பார்வை
*பேச்சில் மாற்றம்
*திடீர் தற்காலிக பார்வை இழப்பு

மூன்றாம் நிலை:

தலைவலி

இது தலையில் ஒரு பக்கத்தில் மட்டும் அதீத வலியை ஏற்படுத்தும்.இந்த தலைவலி சில மணி நேரம் முதல் சில நாட்கள் வரை நீடிக்கலாம்.

தலைவலி அறிகுறி:

*தலையில் துளையிடுவது போன்ற உணர்வு
*தலையில் ஒரு பக்கத்தில் துடிப்பு ஏற்படுதல்
*குமட்டல் உணர்வு
*வாந்தி உணர்வு
*கழுத்து வலி
*தூக்கமின்மை
*தலையில் குத்துவது போன்ற உணர்வு

நான்காம் நிலை: போஸ்ட்டிரோமல்

ஒற்றைத் தலைவலிக்கு அடுத்த நிலை போஸ்ட்டிரோமல் நிலை.இந்த வகை ஒற்றைத் தலைவலி கிட்டத்தட்ட 48 மணி நேரம் வரை நீடிக்கும்.

போஸ்ட்டிரோமல் அறிகுறி:

*தலைசுற்றல்
*எரிச்சல் உணர்வு
*மன அழுத்தம்
*உடல் சோர்வு
*உச்சந்தலை வலி

இதுபோன்ற ஒற்றைத் தலைவலி பிரச்சனை இருப்பவர்கள் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

Exit mobile version