அதிமுகவில் பல உள்கட்சி பூசல்கள் இருப்பது பலராலும் பேசப்பட்டு வரும் நிலையில் மீண்டும் மீண்டும் இவை என நிரூபிக்கும் வண்ணம் அதிமுகவின் செயல்பாடுகள் அமைந்து வருகின்றன. வெளியில் காட்டிக் கொள்ளும் பொழுது நாங்கள் அனைவரும் ஒன்றுதான் என காட்டிக்கொள்ளும் அதிமுகவினர் சில இடங்களில் தங்களுடைய பூசல்களை வெளிப்படையாக வெளிச்சம் போட்டு காட்டி விடுகின்றனர்.
அவ்வாறாகத்தான் தற்பொழுது அதிமுகவின் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான மாவட்ட பொறுப்பாளர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளார். இதில் அதிமுகவின் மூத்த தலைவரான செங்கோட்டையன் பெயர் இடம் பெறவில்லை. இதிலிருந்து இவர்களுக்குள் இருக்கக்கூடிய சண்டைகள் வெளிச்சத்திற்கு வந்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் செங்கோட்டையன் அவர்களிடம் செய்தியாளர்கள் இது குறித்து கேள்வி எழுப்பியதற்கு அவர் தெரிவித்த பதில் பின்வருமாறு :-
தனக்கு அந்தியூர் சட்டமன்ற தொகுதியில் துரோகிகள் சிலரால் தோல்வி ஏற்பட்டதாகவும், அந்தியூர் சட்டமன்ற தொகுதியை தவிர வேறு எந்த தொகுதியையும் தான் குறிப்பிடவில்லை என்று தெரிவித்த செங்கோட்டையன் அந்தியூர் சட்டமன்ற தொகுதியில் வெளிப்படையாகவே சிலர் வேலை பார்த்தனர் என்று குறிப்பிட்டிருக்கிறார். இதனை தொடர்ந்து அதிமுக கட்சியில் தான் எப்பொழுதுமே ஒரு சாதாரண தொண்டன் தான் என்றும் தெரிவித்திருக்கிறார். இவர்களுடைய இந்த செயலானது இவர்களுக்கிடையில் இருக்கக்கூடிய பூசல்களை மூடி மறைப்பதாகவே அமைந்திருக்கிறது.