Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மூட்டு வலி உங்களை பாடாய் படுத்தி எடுக்கிறதா? அப்போ முடக்கத்தான் கீரை எண்ணெயை தயார் செய்து யூஸ் பண்ணுங்க!!

#image_title

மூட்டு வலி உங்களை பாடாய் படுத்தி எடுக்கிறதா? அப்போ முடக்கத்தான் கீரை எண்ணெயை தயார் செய்து யூஸ் பண்ணுங்க!!

இன்றைய காலத்தில் பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை அனைவரும் மூட்டு வலியால் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த பிரச்சனை ஏற்பட்டு விட்டால் சிறு வேலையை செய்வதற்கு கூட கடிமனாக இருக்கும்.

மூட்டு வலி ஏற்படக் காரணங்கள்:-

*ஆரோக்கியமற்ற உணவு

*ஜவ்வு தேய்மானம் ஆகுதல்

*எலும்பு தேய்மானம் ஆகுதல்

*வயது மூப்பு

*வேலைப் பளு

*உடல் பருமன்

இதை ஆரம்ப நிலையில் கண்டறிந்து குணப்படுத்துவது மிகவும் முக்கியம் ஆகும். இதற்கு இயற்கை முறையில் தீர்வு காண்பதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:-

*முடக்கத்தான் கீரை – 1 கட்டு

*நல்லெண்ணெய் – 1/2 லிட்டர்

*பூண்டு – 10 பற்கள்

மூட்டு வலி தைலம் செய்யும் முறை:-

1 கட்டு முடக்கத்தான் கீரையை எடுத்து பொடியாக நறுக்கி கொள்ளவும். அடுத்து 10 பல் பூண்டை தோல் நீக்கி கொள்ளவும்.

அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் இந்த முடக்கத்தான் கீரை மற்றும் தோல் நீக்கிய பூண்டை சேர்த்து ஒரு சூத்து விடவும். பின்னர் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மைய்ய அரைத்து கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் ஒரு இரும்பு கடாய் வைத்து அதில் அரைத்து வைத்துள்ள முடக்கத்தான் கீரை விழுதை சேர்த்துக் கிளறி கொள்ளவும்.

அடுத்து 1/2 லிட்டர் நல்லெண்ணெய் ஊற்றி நன்கு கலந்து விடவும். முடக்கத்தான் கீரையின் சாறு நல்லெண்ணெயில் கலந்து நன்கு கொதித்து வர வேண்டும்.

இ வ்வாறு கொதித்து வந்த பின்னர் அடுப்பை அணைத்து நன்கு ஆற விடவும். பின்னர் இதை ஒரு பாட்டிலில் ஊற்றி சேமித்து வைத்துக் கொள்ளவும்.

பிறகு இதை மூட்டுகளில் மேல் தினமும் தடவி வருவதன் மூலம் நாள்பட்ட மூட்டு வலி விரைவில் குணமாகும்.

Exit mobile version