ஆண்களே மலட்டுத்தன்மை குறைபாடா?  விந்தணு உற்பத்தி செய்ய இந்த உணவை சாப்பிட்டால் போதும்!

0
62
#image_title

ஆண்களே மலட்டுத்தன்மை குறைபாடா?  விந்தணு உற்பத்தி செய்ய இந்த உணவை சாப்பிட்டால் போதும்!

இன்றைய காலத்தில் உணவுப்பழக்கங்கள் அனைத்தும் மாறிவிட்டன. ஓடுற ஓட்டத்தில் இரவு பகல் பார்க்காமல் வேலை செய்கிறார்கள். இதனால் பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்குக்கூட மலட்டுத்தன்மை ஏற்படுகிறது.

உடலில் உயிர் அணுக்களின் எண்ணிக்கை குறைவதாலும், அதிகளவு மன அழுத்தம் காரணமாக, ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தி குறைந்து, ஹார்மோன் ஏற்றத் தாழ்வுகளால் ஆண்களுக்கு மலட்டுத் தன்மை ஏற்படுகிறது.

மேலும், ஆண்கள் அதிகளவில் போதை மருந்துகள், ஆல்கஹால், புகைபிடித்தல் காரணமாக அவர்களுக்கு மலட்டுத் தன்மை ஏற்படுகிறது.

போதை பருந்து பயன்படுத்தினால் ஆண்களின் விந்தணுக்களின் உற்பத்தி குறைந்து விடும். அதிகமான உடல் பருமன் கூட ஆண்களுக்கு மலட்டுத் தன்மைக்கு காரணமாகிவிடும்.

சரி… இந்த மலட்டுத்தன்மையை போக்க என்னென்ன உணவுகள் சாப்பிடலாம் என்று பார்ப்போம் –

ஆண்கள் வைட்டமின் சி மற்றும் துத்தநாகம் போன்ற தாதுக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.

பச்சைக் காய்கறிகள், ஆரஞ்சு, தக்காளி, பீன்ஸ் போன்றவற்றை அதிகளவில் சாப்பிடலாம். காய்கறிகளை அதிகளவில் சாப்பிட்டால் மலட்டுத் தன்மை குறையும்.

முட்டையின் மஞ்சள் கரு சாப்பிடலாம். முட்டை மஞ்சள் கருவில் வைட்டமின் டி உள்ளது. இது டெஸ்டோஸ்டீரான் சுரப்பைத் தூண்டும்.

ஆண்கள் மாதுளை பழத்தை அதிகமாக சாப்பிடலம். அதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் டெஸ்டோஸ்டீரான் விந்தணு உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும்.

ஆண்கள் மீனை நன்றாக சாப்பிடலாம். ஏனென்றால், மீனில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகளவில் உள்ளது. இவை மலட்டுத்தன்மையை போக்கும்.

ஆண்கள் சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை பழம், திராட்சை அடிக்கடி சாப்பிடலாம். அதில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் விந்தணுவை உற்பத்தி செய்யும்.

ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

அவகேடோவை நன்றாக சாப்பிடலாம். அதில் உள்ள வைட்டமின் இ விந்தணுவை உற்பத்தி செய்யும்.

அஸ்வகந்தா என்ற ஆயுர்வேத மூலிகை, ஆண்களுக்கு விந்தணுக்களின்எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும்.

அஸ்வகந்தா லேகியம் சாப்பிட்டு வந்தால் மலட்டுத் தன்மை சரியாகும்.

அத்திப்பழம் தொடர்ந்து 41 நாட்கள் சாப்பிட்டு வந்தால், விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.