நாள்பட்ட மலச்சிக்கல் பாதிப்பு மூல நோயாக மாறி மலம் கழிக்க முடியாத நிலையை ஏற்படுத்திவிடுகிறது.பைல்ஸ் பாதிப்பின் முதல் அறிகுறி மலத்தில் இரத்தம் வெளியேறுவது தான்.
ஆசனவாய் பகுதியில் புண்கள்உருவாகி மலம் கழிப்பதில் கடும் சிரமத்தை உண்டாக்கிவிடும்.நீங்கள் பைல்ஸ் பாதிப்பின் எந்த கட்டத்தில் இருந்தாலும் வெந்தயத்தை சாப்பிட்டு வந்தால் அதில் இருந்து விரைவில் மீண்டுவிட முடியும்.
பைல்ஸ் அதாவது மூல நோய் வந்தால் உடலில் பல்வேறு உபாதைகள் ஏற்படும்.மலக்குடல் வீக்கம்,மலச்சிக்கல்,இரத்த சோகை போன்ற பாதிப்புகள் ஏற்படும்.எனவே பைல்ஸ் பாதிப்பில் இருந்து மீள கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை தவறாமல் முயற்சித்து வாருங்கள்.
தேவையான பொருட்கள்:-
1)வெந்தய விதை – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கப்
செய்முறை விளக்கம்:-
முதல் ஸ்டெப்:
ஒரு கிண்ணத்தில் சொல்லிய அளவுப்படி வெந்தயத்தை போட்டு தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் நன்கு ஊறவிடுங்கள்.
இரண்டாவது ஸ்டெப்:
மறுநாள் இந்த வெந்தயத்தை ஊறவைத்த தண்ணீரை பருக வேண்டும்.பிறகு ஊறவைத்த வெந்தயத்தை நன்கு மென்று சாப்பிடுங்கள்.
மூன்றாவது ஸ்டெப்:
இந்த செயல்முறைக்கு பிறகு ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.இந்த வெந்தய நீரை தொடர்ந்து பருகி வந்தால் பைல்ஸ் புண்கள் ஆறிவிடும்.
மேலும் பைல்ஸ் பாதிப்பு குணமாக கீழே கொடுக்கப்பட்டுள்ள மற்றொரு தீர்வை முயற்சிக்கலாம்.முதலில் ஊறவைத்த வெந்தயத்தை மிக்சர் ஜாரில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.
பிறகு ஒரு கிளாஸ் மோரில் இந்த வெந்தய பேஸ்டை போட்டு நன்கு மிக்ஸ் செய்து பருகி வந்தால் பைல்ஸ் புண்கள் ஆறும்.
மேலும் சில நாட்டு வைத்திய குறிப்புகள் மூலம் பைல்ஸ் பாதிப்பை சரி செய்து கொள்ளலாம்.துத்தி கீரையை அரைத்து பருகினால் பைல்ஸ் புண்கள் ஆறும்.
கற்றாழை மடலில் இருந்து ஜெல்லை பிரித்து ஆலிவ் எண்ணெயில் கலந்து ஆசனவாய் பகுதியில் தடவி வந்தால் பைல்ஸ் புண்கள் ஆறும்.சுத்தமான தேங்காய் எண்ணெயை கை விரலில் நினைத்து ஆசனவாய் பகுதியில் உள்ள புண்கள் மீது தடவி வந்தால் அவை சீக்கிரம் ஆறிவிடும்.
அதேபோல் பூண்டு பற்களை தோல் உரித்துவிட்டு பாத்திரத்தில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.பிறகு இந்த பூண்டு நீரை ஆறவைத்து ஒரு காட்டன் துணியை போட்டு நினைத்து ஆசனவாய் பகுதியில் ஒற்றி எடுத்தால் பைல்ஸ் புண்கள் ஆறிவிடும்.