நாம் விரும்பி சாப்பிடும் காய்கறிகள் பல உள்ளன.அதில் பெரும்பாலனோர் உணவு பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது உருளைக்கிழங்கு தான்.அசைவ உணவிற்கு இணையான சத்துக்களை கொண்டிருக்கும் உருளைக்கிழங்கை வறுவல்,பொரியல்,குழம்பு,சிப்ஸ் போன்று செய்து சாப்பிடும் பழக்கம் நம்மிடம் இருக்கிறது.
உருளைக்கிழங்கில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள்:
1)நார்ச்சத்து 2)புரதம் 3)சோடியம் 4)பொட்டாசியம் 5)வைட்டமின் சி 6)சர்க்கரை சத்து 7)கலோரி
8)கார்போஹைட்ரேட் 9)நிறைவுற்ற கொழுப்பு 10)இரும்பு 11)வைட்டமின் பி6
உருளைக்கிழங்கு ஆரோக்கிய நன்மைகள்:
*செரிமானப் பிரச்சனை இருப்பவர்கள் உருளைக்கிழங்கை சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும்.
*அடிக்கடி உருளைக்கிழங்கு சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பாதிப்பு குணமாகும்.
*உருளைக்கிழங்கில் உள்ள பொட்டாசியம் சத்து இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.
*உருளைக்கிழங்கு சாறு பருகி வந்தால் வயிற்றுப் புண்,வயிறுக் கோளாறு பிரச்சனை சரியாகும்.
*இரத்த கொதிப்பு பிரச்சனை இருபவர்களுக்கு உருளைக்கிழங்கு சாறு நல்லது.
தினமும் உருளைக்கிழங்கு சாப்பிடுவது நல்லதா?
உருளைக்கிழங்கு நல்லது என்றாலும் இதை தினமும் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுவிடும்.
தினமும் உருளைக்கிழங்கு சாப்பிட்டு வந்தால் வாயுத் தொல்லை,வயிறு உப்பசம்,வயிற்று வலி போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
தினமும் உருளைக்கிழங்கு சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரித்துவிடும்.உடல் பருமன் பருமன் பிரச்சனை இருப்பவர்களுக்கு உருளைக்கிழங்கை தவிர்ப்பது நல்லது.
அடிக்கடி உருளைக்கிழங்கை சாப்பிட்டால் இரத்த சர்க்கரை அளவு அதிகரித்துவிடும்.நீரிழிவு நோயாளிகள் உருளைக்கிழங்கை தவிர்ப்பது நல்லது.
வாயுத் தொல்லை இருப்பவர்கள் உருளைக்கிழங்கை தவிர்க்க வேண்டும்.அடிக்கடி உருளைக்கிழங்கு சாப்பிட்டால் சிலருக்கு தோல் அரிப்பு,தோல் தடிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படும்.ஒவ்வாமை பிரச்சனை இருபவர்கள் உருளைக்கிழங்கை தவிர்க்க வேண்டும்.
குறை இரத்த அழுத்தப் பிரச்சனை இருப்பவர்கள் உருளைக்கிழங்கை தவிர்க்க வேண்டும்.தினமும் உருளைக்கிழங்கு சாப்பிட்டால் உடல் சோர்வு,தூக்கமின்மை போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
உருளைக்கிழங்கை எண்ணையில் பொரித்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.எண்ணையில் வறுத்த உருளைக்கிழங்கை சாப்பிட்டால் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்துவிடும்.அது மட்டுமின்றி சருமப் பிரச்சனைகள் ஏற்படக் கூடும்.எனவே உருளைக்கிழங்கை தினமும் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.