தனியாரிடம் இருக்கும் தடுப்பூசிகள் பறிமுதலா? மத்திய அமைச்சர் வெளியிட்ட செய்தி!
கொரோனா தொற்றின் பாதிப்பால் மக்கள் பெருமளவு பாதிப்படைந்துள்ளனர்.ஒன்றரை ஆண்டுகளாக மக்கள் இந்த பெரும் தொற்றிலிருந்து விடுபட பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றனர்.மக்களுடைய பாதுகாப்பை கருதியும் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.தற்பொழுது கொரோனா தொற்றானது முதல்,இரண்டாம் என ஆரம்பித்து மூன்றாவது அலையை நோக்கி சென்றுள்ளது.மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாரும் கூறி வருகின்றனர்.
இவ்வாறு சூழல் நடந்து கொண்டிருக்கும் நிலையில் மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரதுறை அமைச்சர் மா.சுப்ரமணியம் அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் சென்று பார்வையிட்டு வருகிறார்.அதுமட்டுமின்றி தற்போழுது முதல்வர் ஸ்டாலின்,தொடங்கி வைத்த மக்களை தேடி மருத்துவத்தை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் பல்வேறு மாவட்டங்களில் தொடங்கி வைத்து வருகிறார்.
அவ்வாறு இந்தியாவுக்கு கிடைத்த 75 வது விடுதலை தினத்தை கொண்டாடும் விதமாக சென்னை கடற்கரையிலுள்ள விவேகானந்தர் இல்லத்தில் புகைப்பட விழா மற்றும் கொரோனா சம்பந்தப்பட்ட நூல் வெளியீடு செய்தனர்.அதுமட்டுமின்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு வாகனங்கள் துவக்கி வைத்தனர்.இதனை அனைத்தும் துவைக்கி வைக்கும் விழாவில் மத்திய அமைச்சர் எல்.முருகனும் கலந்துக்கொண்டார்.
மேலும் மத்திய அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அவர் கூறியது,தற்பொழுது எங்கு விழாக்கள் நடந்தாலும்,கூட்டம் கூடுகிறது.அவ்வாறு கூட்டம் கூடும் போதும் கொரோனா விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றார்.தற்பொழுது இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்து 75 ஆண்டுகள் ஆகிறது.அதனால் இந்த ஆண்டில் சுதந்திர தினமன்று விழிப்புணர்வு பற்றிய வானகங்கள் துவக்கியுள்ளது என்றார்.
தற்பொழுது உள்ள தமிழகத்திற்கு நல்ல செய்தி என்னவென்றால் 15 நாட்களில் 2000 ற்கும் மேல் இருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தற்பொழுது 300 க்கு மேலாக குறைந்து 1600 ஆக உள்ளது என்றார்.தற்பொழுது இந்தியாவில் அதிகம் தடுப்பூசி போடப்பட்ட மாநிலங்களில் தமிழகம் 9 இடத்தில் உள்ளது.கூடிய விரைவில் முதல் இடத்தை பிடிக்க வேண்டும் என்று கூறினார்.இது கூடிய விரைவில் நடக்க வேண்டுமென்றால் தனியாருக்கு ஒதுக்கிய தடுப்பூசிகள் அனைத்தும் மத்திய அரசு பறிமுதல் செய்து மாநில அரசுக்கு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.