உங்களில் சிலருக்கு காயங்கள்,புண்கள்,கொப்பளங்கள் நாளடைவில் சருமத்தில் தழும்புகள் போன்று மாறிவிடும்.இந்த தழும்புகள் சரும அழகை முழுமையாக பாழாக்கிவிடும்.இதை குணமாக்க இங்கு கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சிக்கவும்.
தீர்வு 01
*அவரை இலை
*எலுமிச்சை சாறு
பத்து அவரை இலையை தண்ணீரில் சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்.
இந்த அவரை சாறில் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து தழும்புகள் மீது பூசி வர ஒரே மாதத்தில் பலன் கிடைக்கும்.
தீர்வு 02
*சந்தனம்
*பன்னீர்
இரண்டு தேக்கரண்டி சந்தனப் பொடியை கிண்ணம் ஒன்றில் கொட்டி கொள்ளவும்.பிறகு அதில் இரண்டு தேக்கரண்டி பன்னீர் சேர்த்து நன்கு குழைத்துக் கொள்ளவும்.இதை முகம் முழுவதும் அப்ளை செய்து பிறகு குளிர்ந்த நீரில் வாஷ் செய்து வந்தால் தழும்புகள் அனைத்தும் மறைந்துவிடும்.
தீர்வு 03
*கற்றாழை
*மஞ்சள் தூள்
கற்றாழை மடலின் தோலை நீக்கிவிட்டு அதன் ஜெல்லை மட்டும் கிண்ணத்தில் போட்டுக்க கொள்ளவும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.இதை தழும்புகள் மீது பூசி வந்தால் ஒரே மாதத்தில் மறைந்துவிடும்.
தீர்வு 04
*வசம்புத் தூள்
*பன்னீர்
*கஸ்தூரி மஞ்சள்
கிண்ணம் ஒன்றை எடுத்து ஒரு தேக்கரண்டி வசம்புத் தூள்,ஒரு தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சள் தூள் சேர்த்து மிக்ஸ் செய்யவும்.பிறகு அதில் இரண்டு தேக்கரண்டி ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு குழைத்து தழும்புகள் மீது பூசினால் சில வாரங்களில் அவை மறைந்துவிடும்.