10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் இத்தனை சதவிகிதம் பேர் தேர்ச்சியா? அசத்திய தேனி மாணவர்கள்! 

0
244
Are so many 10th and 12th grade students proficient? Unreal Theni students!
10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் இத்தனை சதவிகிதம் பேர் தேர்ச்சியா? அசத்திய தேனி மாணவர்கள்!
தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில்  பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் தேனி மாவட்டத்தில் பயின்று தேர்வு எழுதிய மாணவ மாணவிகளில் +2 தேர்வில் 94.39 சதவிகிதத்தினர் , SSLC தேர்வில் 89 சதவிகிதத்தினர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு :-
தமிழகத்தில் 12ம் வகுப்புக்கு கடந்த மே மாதத்தின் தொடக்கத்தில் பொதுத் தேர்வு தொடங்கி மே 28ம் தேதி நிறைவுற்றது. தமிழகம் முழுவதிலும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வினை 8 லட்சத்து 37ஆயிரத்து 317 பேர் எழுதியுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் 140க்கும் மேற்பட்ட மையங்களில் 12ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்றது. இந்த பணியில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்ததையொட்டி பன்னிரெண்டு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளிவந்தது. அதன்படி,
தேர்வு விகிதம் :-
தேனி மாவட்டத்தில் +2 தேர்வில் 94.39 சதவிகிதத்தினர் மற்றும் SSLC தேர்வில் 89 சதவிகிதத்தினர் தேர்ச்சி பெற்றனர்.
தேனி மாவட்டத்தில் +2 தேர்வை 7,090 மாணவிகளும், 6,943 மாணவர்களும் எழுதி உள்ளனர். மாவட்டத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை மொத்தம் 14,033 மாணவ மாணவிகள் எழுதியுள்ளனர். இதில் 6,503 மாணவர்களும் 6,743 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 91.72 ஆகவும் மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 97.12 ஆகவும் உள்ளது. மாணவ மாணவிகளின் சராசரி தேர்ச்சி விகிதம் 94.39 சதவீதமாக உள்ளது
பள்ளிகளின் விவரம் :-
மாவட்டத்தில் ஆதிதிராவிடர் பள்ளியில் பயின்று பனிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய 48 மாணவ-மாணவிகளில் 44 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசின் முழு உதவி பெறும் (fully aided) பள்ளிகளில் பயின்று தேர்வு எழுதிய 1,620 பன்னிரண்டாம் வகுப்பு மாணவ மாணவிகளில் 1,513 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அரசு பள்ளிகளில் பயின்று பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு எழுதிய 5,065 மாணவ மாணவிகளில் 4,590 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்
அரசு கள்ளர் பள்ளிகளில் பயின்று பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய 343 மாணவ மாணவிகளில் 318 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாவட்டத்தில் உள்ள நகராட்சி பள்ளியில் பயின்று தேர்வு எழுதிய 45 மாணவிகளும் முழுமையாக தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்று 12ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதிய 3,403 மாணவ மாணவிகளில் 3,310 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாவட்டத்தில் தனியார் பள்ளியில் பயின்று பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய 3,509 மாணவ மாணவிகளில் 3,493 மாணவ மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு :-
இதேபோல மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வினை 7857 மாணவர்கள் , 7246 மாணவிகள் என மொத்தம் 15,103 மாணவ மாணவிகள் தேர்வு எழுதி உள்ளனர்.
15,103 மாணவ மாணவிகள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய நிலையில் 6,605 மாணவர்களும், 6837 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 84.07 சதவிகிதமாகவும் மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 94.36 சதவிகிதமாகவும் உள்ளது . பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளின் சராசரி தேர்ச்சி சதவிகிதம் 89 சதவிகிதமாக உள்ளது.