Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பாஜகவை மட்டுமே தேர்தலில் குறிவைக்கிறதா தமிழக எதிர்க்கட்சிகள்?

#image_title

பாஜகவை மட்டுமே தேர்தலில் குறிவைக்கிறதா தமிழக எதிர்க்கட்சிகள்?

மக்களவை தேர்தல் பரபரப்பாக நடக்கும் சூழலில் தமிழ்நாட்டில் திமுக, அதிமுக தவிர மற்ற முக்கிய கட்சிகளும் பாஜகவையே குறிவைத்து தேர்தலை நோக்கி நகர்வதாக பார்க்கப்படுகிறது.

பாஜகவுக்கு எதிராக இந்தியா கூட்டணி முக்கிய வியூகங்களை அமைத்து வருகிறது. பாஜகவை மறுபடியும் ஆட்சியில் அமரவிடாமல் இருக்க எதிர்க்கட்சிகள் தீவிரமாக களமிறங்கியுள்ளன. தமிழ்நாட்டில்கூட திராவிட கட்சிகளை எதிர்க்கும் நாம் தமிழர் போன்ற கட்சிகளும் தற்போது பாஜகவின் பக்கம் திசைதிரும்பியுள்ளன. திராவிட கட்சிகளின் எதிர்ப்பைவிட, பாசிச பாஜகவை எதிர்ப்பதுதான் இப்போது தேவையான ஒன்றாக இருக்கிறது என அவர்கள் கருதுகின்றதாக தெரிகிறது.

நேற்றுகூட பரப்புரையின்போது பேசிய சீமான், “அண்ணாமலை எடுத்திருப்பது போலீஸ் பயிற்சி. நான் எடுத்திருப்பது போராளி பயிற்சி. இருவரும் மோதிப் பார்ப்போமா?. எனக்கு நீங்கள் எல்லாம் சாதாரணம். உங்களுக்கு பிரச்சாரம் பிரதமர் வருவார். மத்திய அமைச்சர் வருவார். ஆனால் எனக்கு எல்லாமே நான்தான். அப்பநான் தானே கெத்து” என்று கூறினார். இப்படி அண்ணாமலையை நேருக்கு நேராக வம்பிழுக்கும் அளவுக்கு சென்றுவிட்டார் சீமான்.

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவும், பாஜக தங்கள் வங்கிக்கணக்கை முடக்குவதாக மிரட்டியதாகவும், வேறு கட்சியுடன் கூட்டணி அமைக்காமல் இருக்க எச்சரிக்கை விடுத்ததாகவும் கூறியிருந்தார். இப்படி பாஜகவுக்கு எதிராக களம் இறங்கியிருக்கின்றன இந்த கட்சிகள். அதிமுகவும், திமுகவும்கூட தங்களுக்குள் மாறிமாறி மோதுவதைவிட பாஜகவையே அதிகம் எதிர்த்து வருகின்றனர்.

தேசிய அளவில் பாஜகவுக்கு பெரிய அளவில் எதிர்ப்பு இருக்கும் சூழலில், தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளுக்கும் அதே எதிர்ப்பு இருந்தது. ஆனால் தற்போதைய தேர்தல் சூழலில் பாஜகவை எதிர்ப்பதையே தமிழக எதிர்க்கட்சிகள் முதன்மை நோக்கமாக கொண்டிருப்பதாக தெரிகிறது.

Exit mobile version