Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அக்குள் மற்றும் கழுத்துப்பகுதி கருப்பாக உள்ளதா!! இதோ மூன்று ஈஸி ரெமிடி!!

#image_title

அக்குள் மற்றும் கழுத்துப்பகுதி கருப்பாக உள்ளதா!! இதோ மூன்று ஈஸி ரெமிடி!!

 

நம்மில் சிலருக்கு உடலில் கழுத்துப்பகுதி, கை முட்டி, அக்குள் பகுதிகளில் கருப்பாக இருக்கும். இது என்ன என்று பலருக்கும் தெரிவது இல்லை. இதை சரி செய்ய என்ன சிகிச்சை செய்ய வேண்டும் என்பதும் யாருக்கும் தெரிவதில்லை. இந்த பதிவில் அதன் அறிகுறி என்ன என்றும் அதை சரி செய்ய எளிமையான மூன்று வீட்டு வைத்தியங்கள் பற்றியும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

 

நம் உடலில் கழுத்துப் பகுதி, முழங்கை, அக்குள் பகுதிகளில் கருப்பாகத் தோன்றும். இதை கருப்பு கழுத்து(Black Neck) அல்லது அடர்ந்த நிற கழுத்து(Dark Neck) அல்லது கருமைத் தோல் என்று அழைப்பர்.

 

நாம் அனைவரும் நமது தோல் பளபளப்பாகவும் ஆரோக்கியம்கவும் இருக்க வேண்டும் என்று அதிக கவனத்துடன் இருக்கிறோம். ஆனால் அதையும் மீறி வெளியே தெரியக்கூடிய நம் கழுத்துப் பகுதிகளில் தோல் கருப்பாக மாறி கருமையாக காணப்படும். இத நாம் சாதாரணமாக விட்டுவிடுகிறோம். ஆனால் இவ்வாறு கழுத்துப்பகுதி கருமையாக மாறுவது நம் உடலில் உள்ளே இருக்கும் உறுப்புகளுக்கு ஏற்படும் நோய் காரணமாகவும் இந்த கருமைத் தோல் நோய் ஏற்படும் என்று ஆய்வுகள் கூறுகின்றது.

 

இந்த கருமைத் தோல் எந்தெந்த உள்ளுறுப்பு நோய்களால் எற்படுகின்றது என்று பார்க்கலாம்.

 

* ஒரு நபருக்கு இன்சுலின் அளவு அதிகமாக இருக்கும் பொழுது கழுத்தை சுற்றி இந்த கருமைத் தோல் ஏற்படும்.

 

* துரித உணவுகளை அடிக்கடி அதிகமாக சாப்பிடும் பழக்கம் உள்ளவர்களுக்கு இந்த கருமை தோல் நோய் ஏற்படும்.

 

* பெண்களுக்கு பிசிஓடி பிரச்சனை இருந்தாலும் இந்த கருமைத் தோல் நோய் ஏற்படும்.

 

* உடல் பருமன் அதிகமாக உள்ள ஆண்களுக்கும் பெண்களுக்கும் இந்த கருமை தோல் நோய் ஏற்படும்.

 

* தைராய்டு பிரச்சனை இருப்பவர்களுக்கும் இந்த கருமைத் தோல் நோய் ஏற்படும்.

 

இந்த கருமை தோல் நோய் உள்ளவர்கள் இந்த நோய்க்கு சிகிச்சை பெற்றும் அது போகவில்லை என்றால் அவர்கள் சர்க்கரை நோய் பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். இந்த கருமை தோல் பிரச்சனையை சரி செய்ய நிறைய வீட்டு வைத்திய முறைகள் உள்ளது. அதில் முக்கியமான மூன்று வைத்திய முறைகள் என்ன என்று பார்க்கலாம்.

 

1. ஆப்பிள் சீடர் வினிகரை வைத்து இந்த கருமை தோல் பிரச்சனையை சரி செய்யலாம். ஒரு பங்கு ஆப்பிள் சீடர் வினிகர் எடுத்துக் கொண்டு அதில் இரண்டு பங்கு தண்ணீரை சேர்த்து கலந்து கொள்ளவும். பிறகு இதை உடலில் எங்கெல்லாம் கருமையான நிறம் உள்ளதோ அங்கு எல்லாம் தேய்க்க வேண்டும். அரை மணி நேரம் இதை காய வைத்து பிறகு இதை சுத்தம் செய்யலாம். தொடர்ச்சியாக இதை செய்ய வேண்டும். கருமை நிறம் மறையும் வரை இதை செய்ய வேண்டும். ஆப்பிள் சீடர் வினிகரை பயன்படுத்தும் பொழுது தோல் வறட்சியாகும். இதனால் ஆப்பிள் சீடர் வினிகர் தேய்த்த பிறகு கற்றாழை ஜெல்லை தேய்த்து விட வேண்டும்.

 

2. சமையலுக்கு பயன்படுத்தப்படும் சோடா உப்பு பயன்படுத்தியும் இந்த கருமையை போக்கலாம். ஒரு பங்கு சோடா உப்பு எடுத்துக் கொண்டு மூன்று பங்கு தண்ணீர் தண்ணீர் எடுத்து இரண்டையும் சேர்த்து பேஸ்ட் மாதிரி தயாரித்துக் கொள்ளவும். இந்த பேஸ்டை கருமையாக இருக்கும் இடங்களில் தேய்த்து அரைமணி நேரம் கழித்து இதை கழுவிவிட வேண்டும். இதையும் தொடர்ச்சியாக இந்த கருமை நிறம் மறையும் வரை பயன்படுத்த வேண்டும்.

 

3. மூன்றாவது முறையில் கருமையான தோலை கடலை மாவு அல்லது பாசிப்பயிறு மாவை பயன்படுத்தி எவ்வாறு மறைய வைப்பது என்று பார்க்கலாம். ஒரு டேபிள் ஸ்பூன் அளவு கடலை மாவு அல்லது பாசிப்பயிறு மாவு எடுத்துக் கொண்டு அதில் பாதி அளவு எலுமிச்சம் பழச்சாறு சேர்க்க வேண்டும். இதை ஒரு பேஸ்டாக தயாரித்து எங்கெல்லாம் கருமையான நிறம் உள்ளதோ அங்கு இந்த பேஸ்டை தேய்க்க வேண்டும். இதை ஒரு இரவு முழுவதும் விட்டுவிட வேண்டும். பிறகு மறுநாள் காலையில் இதை கழுவிடலாம்.

 

இந்த மூன்று வைத்திய முறைகளில் எதாவது ஒன்றை தொடர்ந்து பயன்படுத்தும் பொழுது இந்த கருமையான நிறம் மறையும்.

Exit mobile version