உங்கள் வீட்டில் உள்ள பித்தளை பாத்திரங்கள் மற்றும் பூஜை பொருட்கள் டல்லடிக்கிறதா? அப்போ இப்படி செய்யுங்க.. 2 நிமிடத்தில் புதிது போல் ஜொலிக்கும்!!

0
59
#image_title

உங்கள் வீட்டில் உள்ள பித்தளை பாத்திரங்கள் மற்றும் பூஜை பொருட்கள் டல்லடிக்கிறதா? அப்போ இப்படி செய்யுங்க.. 2 நிமிடத்தில் புதிது போல் ஜொலிக்கும்!!

நம் தென்னிந்தியர்கள் பித்தளை பாத்திரங்களை உபயோகிப்பதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். இந்த பித்தளை பாத்திரத்தில் சமைத்து சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். எந்தளவிற்கு இந்த பித்தளை பாத்திரங்களை பயன்படுத்துகிறோமோ அந்தளவிற்கு அதை பராமரிப்பது அவசியம்.

சமையல் பாத்திரங்கள் மட்டுமல்ல பூஜைக்கு பயன்படுத்தும் பித்தளை பாத்திரங்களை முறையாக முறையாக சுத்தம் செய்து புதிது போன்று வைத்துக் கொள்ள சில வழிகள் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

தீர்வு 1:

தேவையான பொருட்கள்:-

*சமையல் சோடா – 4 தேக்கரண்டி

*எலுமிச்சை சாறு – 4 தேக்கரண்டி

*பாத்திரம் துலக்கும் பவுடர் – 5 தேக்கரண்டி

செய்முறை:-

ஒரு பவுலில் 4 தேக்கரண்டி சமையல் சோடா, 4 தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து கொள்ளவும். பின்னர் 5 தேக்கரண்டி அளவு பாத்திரம் துலக்கும் பவுடரை சேர்த்து நன்கு கலந்து விடவும்.

அடுத்து பழைய பித்தளை பாத்திரத்தின் மேல் சிறிதளவு தண்ணீர் தெளித்துக் கொள்ளவும். பின்னர் ஒரு ஸ்க்கர்பரில் தயார் செய்து வைத்துள்ள கலவையை போட்டு பித்தளை பாத்திரத்தை தேய்த்துக் கொள்ளவும். நீண்ட நாள் பித்தளை பொருட்களாக இருந்தால் 2 முதல் 3 முறை இவ்வாறு தேய்த்து கழுவிக் கொள்ளவும். இவ்வாறு செய்தால் டல்லடித்த பித்தளை பொருட்கள் பளிச்சென்று மாறிவிடும்.

தீர்வு 2:

தேவையான பொருட்கள்:-

*தூள் உப்பு – தேவையான அளவு

*புளி – 2 எலுமிச்சம் பழ அளவு

*எலுமிச்சை சாறு – 3 முதல் 4 தேக்கரண்டி

*டிட்டர்ஜெண்ட் பவுடர் – சிறிதளவு

செய்முறை:-

பவுலில் சிறிதளவு தூள் உப்பு, 3 முதல் 4 தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளவும். அடுத்து 2 எலுமிச்சம் பழ அளவு புளி சேர்த்து கலக்கி கொள்ளவும்.

இந்த கலவையை வைத்து பித்தளை பொருட்களை தேய்க்கவும். தெடர்ந்து சிறிதளவு டிட்டர்ஜெண்ட் பவுடர் சேர்த்து மீண்டும் தேய்க்கவும். அடுத்து தண்ணீர் கொண்டு அந்த பித்தளை பொருட்களை தேய்க்கவும். இவ்வாறு செய்தால் டல்லடித்த பித்தளை பொருட்கள் நிமிடத்தில் பளிச்சென்று மாறிவிடும்.