காதுகளில் தண்ணீர் சென்று அடைத்துக் கொண்டதா? இதை செய்து வெளியேற்றுங்கள்!!

0
187
Are the ears clogged with water? Do this and get rid of it!!

காதுகளில் தண்ணீர் சென்று அடைத்துக் கொண்டதா? இதை செய்து வெளியேற்றுங்கள்!!

உடலில் உறுப்புகளில் காது முக்கிய உறுப்பாக உள்ளது.கேட்கும் திறம் கொண்ட உறுப்புகளான காதுகளை சுத்தமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.காதுகளில் அழுக்கு தேங்கினாலோ அல்லது தூசிகள் நுழைந்தாலோ தீராத வலி,குடைச்சலை ஏற்படும்.

அதேபோல் நாம் குளிக்கும் பொழுது காதுகளில் தண்ணீர் புகுந்து கொண்டால் அவை உறுத்திக் கொண்டே இருக்கும்.காதிற்குள் கணமான பொருள் உள்ளது போன்ற உணர்வு உண்டாகும்.நீர் காதுகளை அடைத்து கொண்டு குடிச்சலை உண்டாக்கும்.

இவ்வாறு காதிற்குள் தண்ணீர் புகுந்து விட்டால் அதை பட்ஸ்,எண்ணெய் விட்டு வெளியேற்றும் பழக்கம் உங்களில் பலருக்கும் இருக்கும்.ஆனால் இவ்வாறு செய்வது காதுகளை பாதிக்கச் செய்துவிடும்.

காதிற்குள் எந்த பொருட்களையும் நுழைக்க கூடாது.இவ்வாறு செய்வதால் காது ஜவ்வுகள் பாதிப்படைந்து கேட்க்கும் திறன் குறைய வாய்ப்பிருக்கிறது.எனவே காதிற்குள் புகுந்த நீரை அகற்ற இந்த டிப்ஸை முயற்சித்து வாருங்கள்.இதனால் தங்கள் காதுகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

ஒரு சுத்தமான காட்டன் துணையின் நுனியை வைத்து காது ஓட்டைகளை சுத்தம் செய்தால் உள்ளிருக்கும் தண்ணீர் வெளியேறிவிடும்.

தலையை ஒருபக்கம் சாய்த்தவாறு வைத்தால் சில நிமிடங்களில் காதிற்குள் இருக்கின்ற தண்ணீர் வெளியேறிவிடும்.

நன்கு சூரிய ஒளி படுகின்ற இடத்தில் தண்ணீர் தலையை சாய்த்தவாறு செய்தால் காதிற்குள் உள்ள தண்ணீர் வெளியேறிவிடும்.

இவ்வாறு செய்த பின்னரும் காதுகளில் இருக்கின்ற தண்ணீர் வெளியேறவில்லை என்றால் உடனடியாக மருத்துவரை அணுகி உரிய தீர்வு காண்பது நல்லது.