பெண்கள் தங்கள் அழகை பராமரிக்க மெனக்கெட தயங்குவதில்லை.அழகு என்றால் முகம் மட்டும் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.ஆனால் அக்குள்,கழுத்து உள்ளிட்ட பகுதியில் காணப்படும் கருமையை போக்க அக்கறை செலுத்ததால் அவர்களின் அழகு குறைகிறது.
அக்குள் மற்றும் கழுத்து பகுதியை சுற்றி இருக்கும் கருமை நீங்க கீழ்கண்ட வீட்டு வைத்தியத்தை தொடர்ந்து பின்பற்றுங்கள்.
தேவையான பொருட்கள்:-
1)கஸ்தூரி மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி
2)பெட்ரோலியம் ஜெல் – சிறிதளவு
3)எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி
தயாரிக்கும் முறை:-
ஸ்டெப் 01:
ஒரு பீஸ் மஞ்சள் கிழங்கை நெருப்பில் போட்டு சுட்டு எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை ஆறவைத்து மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
ஸ்டெப் 02:
பிறகு இந்த கஸ்தூரி மஞ்சள் பொடியை கிண்ணத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.பின்னர் அதில் சிறிதளவு பெட்ரோலியம் ஜெல் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.
ஸ்டெப் 03:
பின்னர் எலுமிச்சம் பழத்தை நறுக்கி அதன் சாறை மஞ்சள் தூளில் பிழிந்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்து கழுத்து மற்றும் அக்குள் உள்ளிட்ட கருமையான இடத்தில் பூசி நன்றாக காயவைத்து கொள்ள வேண்டும்.
ஸ்டெப் 04:
பின்னர் ஒரு காட்டன் துணியை வெது வெதுப்பான தண்ணீரில் போட்டு கழுத்து மற்றும் அக்குள் மீது வைத்து தேய்த்தெடுக்க வேண்டும்.
இப்படி தினமும் ஒருமுறை செய்து வந்தால் அக்குள் மற்றும் கழுத்து பகுதியில் உள்ள கருமை நீங்கும்.தொடை,முழங்கை உள்ளிட்ட இடங்களில் உள்ள கருமை நீங்க இந்த பேஸ்டை அவ்விடத்தில் பூசலாம்.
தேவையான பொருட்கள்:-
1)கற்றாழை ஜெல் – ஒரு தேக்கரண்டி
2)எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி
தயாரிக்கும் முறை:-
ஸ்டெப் 01:
கற்றாழை மடலில் இருந்து பிரஸ் ஜெல் எடுத்து கிண்ணத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
ஸ்டெப் 02:
பிறகு எலுமிச்சம் பழத்தை நறுக்கி சாறு எடுத்து கற்றாழை ஜெல்லில் ஊற்றி நுரை வரும் அளவிற்கு கலந்து கொள்ள வேண்டும்.
ஸ்டெப் 03:
பிறகு இந்த கலவையை அக்குள் மற்றும் கழுத்து பகுதியில் அப்ளை செய்து எலுமிச்சை தோல் கொண்டு சிறிது நேரம் ஸ்க்ரப் செய்ய வேண்டும்.இப்படி செய்த பிறகு வெது வெதுப்பான நீர் கொண்டு அவ்விடத்தை சுத்தப்படுத்த வேண்டும்.இதை தொடர்ந்து செய்து வந்தால் கழுத்து மற்றும் அக்குள் பகுதியில் உள்ள கருமை நீங்கும்.
அதேபோல் டூத் பேஸ்ட்டில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்கி அக்குள் மற்றும் கழுத்தை சுற்றி அப்ளை செய்தால் அவ்விடத்தில் உள்ள கருமை விரைவில் மறைந்துவிடும்.