உங்கள் வீட்டில் பெண் குழந்தைகள் இருக்காங்களா? அப்போ ரூ.11,00,000 கன்பார்ம்! இந்த சான்ஸ மிஸ் பண்ணிடாதீங்கள்!

0
259
Are there any girls in your household? Then Rs.11,00,000 conform! Don't miss this chance!

உங்கள் வீட்டில் பெண் குழந்தைகள் இருக்காங்களா? அப்போ ரூ.11,00,000 கன்பார்ம்! இந்த சான்ஸ மிஸ் பண்ணிடாதீங்கள்!

நம் நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கென்று பல முக்கிய திட்டங்கள் செயல்பாட்டில் இருக்கிறது.அதிலும் பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் வகையில் பல அம்சங்கள் நிறைந்த திட்டங்கள் செயல்பாட்டில் இருக்கிறது.இதில் அதிக பயனுள்ள திட்டமாக அஞ்சல் அலுவலக செல்வமகள் சேமிப்பு திட்டம்(சுகன்யா சம்ரிதி யோஜனா) உள்ளது.கடந்த 2015 ஆம் ஆண்டு பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட செல்வமகள் சேமிப்பு திட்டம் அஞ்சல் அலுவலங்களில் அதிக வட்டி வழங்கும் சேமிப்பு திட்டமாக இருக்கிறது.இதனால் பெற்றோர்கள் மத்தியில் இந்த திட்டத்திற்கு மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகிறது.

மேலும் அஞ்சல் சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் ஏப்ரல்-ஜூன்,ஜூலை-செப்டம்பர்,அக்டோபர்-டிசம்பர்,ஜனவரி-மார்ச் என்று ஒவ்வொரு காலாண்டிற்கும் மாற்றப்பட்டு வருகிறது.இந்த வட்டி விகிதங்கள் கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து மாற்றம் இல்லாமல் இருந்து வருகிறது.

இந்நிலையில் ஜூலை-செப்டம்பர் மாதத்திற்கான அஞ்சல் சேமிப்பு திட்டங்களுக்கான காலாண்டு வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.அதன்படி 8.2% வட்டி வழங்கப்படும் செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் வருடத்திற்கு குறைந்தபட்சம் ரூ.1000 மற்றும் அதிகபட்சம் ரூ.1,50,000 வரை முதலீடு செய்ய முடியும்.

குழந்தைகள் 10 வயதுக்கு குறைவானவர்களாக இருந்தால் பெற்றோர்கள்,பாதுகாவலர்கள் பெயரில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தை தொடங்கலாம்.உங்கள் பெண் குழந்தைக்கு 21 வயது பூர்த்தியான பின்னர் முதலீடு + வட்டி தொகை முழுமையாக கிடைக்கும்.செல்வமகள் திட்டத்தில் நீங்கள் உங்கள் குழந்தைகள் பெயரில் மாதம் ரூ.2000 முதலீடு செய்கிறீர்கள் என்றால் திட்ட முடிவில் ரூ.11,16,000 வரை கிடைக்கும்.8.2% வட்டிக்கான முதிர்வு தொகை இவையாகும்.