அட நகசுத்தியை குணமாக்க இத்தனை இயற்கை வழிகள் உள்ளதா?
1)பாலாடையை நகசுத்தி மீதி தடவி வந்தால் அவை விரைவில் குணமாகும்.
2)மருதாணி இலையை அரைத்து நகசுத்தி மேல் பூசினால் அவை விரைவில் குணமாகும்.
3)மஞ்சள், எலுமிச்சை சாறு, உப்பு கலந்து நகசுத்தி மேல் பூசினால் அவை விரைவில் குணமாகும்.
4)பூண்டை அரைத்து மஞ்சள் கலந்து நகசுத்தி மீதி தடவி வந்தால் அவை விரைவில் குணமாகும்.
5)மஞ்சள், வசம்புத் தூள், சின்ன வெங்காய சாறு, சுக்குத் தூள் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து நகசுத்தி மீதி தடவி வந்தால் அவை விரைவில் குணமாகும்.
6)வேப்பிலையை அரைத்து மஞ்சள் கலந்து நகசுத்தி மீதி தடவி வந்தால் அவை விரைவில் குணமாகும்.
7)கல் உப்பை வெதுவெதுப்பான நீரில் போட்டு நகசுத்தி உள்ள கை அல்லது கால் விரலை அதில் 5 முதல் 10 நிமிடங்களுக்கு ஊறவிட்டு சுத்தம் செய்து வந்தால் நகசுத்தி குணமாகும்.
8)கற்றாழையில் உள்ள ஜெல்லை தனியாக பிரித்து அதில் சிறிதளவு மஞ்சள் மற்றும் விளக்கெண்ணெய் கலந்து நகசுத்தி மீதி தடவலாம்.
9)வேப்ப எண்ணையை நகசுத்தி மீது தடவினால் அவை விரைவில் ஆறும்.
10)வேப்பிலை, மருதாணி இலையை அரைத்து மஞ்சள் கலந்து நகசுத்தி மீது தடவினால் அவை விரைவில் ஆறும்.