அதிகமாக முகச்சுருக்கங்கள் இருக்கின்றதா? அதை சரிசெய்ய ஒரே ஒரு வாழைப்பழம் போதும்!
நம்முடைய முகத்தில் சுருக்கங்கள் அதிகமாக இருக்கும் பட்சத்தில் அந்த சுருக்கங்களை சரி செய்ய வாழைப்பழத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். சருமத்தில் சுருக்கம் என்பது அனைவருக்கும் வரும். ஆனால் அது வயதாக வயதாகத்தான் வரத் தொடங்கும். வயதான நபர்களுக்கு முகச்சுருக்கம் வருவது சாதாரணமான ஒன்றாக இருந்தாலும் தற்பொழுதைய காலத்தில் இளம் வயதினருக்கும் முகச்சுருக்கங்கள் வரத் தொடங்கியுள்ளது.
அதற்கு காரணம் அனைவரும் முகத்தை அழகாக வைத்துக் கொள்ள கவனம் செலுத்துவது தான். முகத்திற்கு பயன்படுத்தும் அழகு சாதனப் பொருட்கள் தான் முகச்சுருக்கம் வருவதற்கு முக்கியமான காரணம் ஆகும். இந்த முகச் சுருக்கங்களை சரி செய்ய சிலர் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்கின்றனர். ஆனால் அதெல்லாம் தேவைப்படாது.
முகச்சுருக்கத்தை சரிசெய்ய நாம் வாழைப்பழத்தை பயன்படுத்தலாம். வாழைப்பழத்தில் சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றது. இந்த வாழைப்பழத்தை அப்படியே பயன்படுத்தாமல் இதனுடன் ஒரு பொருளை சேர்த்து பயன்படுத்தும் பொழுது முகச் சுருக்கத்தை எளிமையாக சரி செய்து விடலாம். அது எவ்வாறு என்பது குறித்து தற்பொழுது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்…
* வாழைப்பழம்
* பன்னீர்
செய்முறை…
முதலில் மிக்சி ஜார் ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் ஒரு வாழைப்பழத்தை சிறிது சிறிதாக வெட்டி சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் பன்னீர் சிறிதளவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் இதை அரைத்து எடுக்க வேண்டும். பேஸ்ட் பதத்திற்கு அரைத்து எடுத்தால் போதும். பின்னர் இந்த வாழைப்பழ பன்னீர் கலவையை முகத்தில் தேய்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் சிறிது நேரம் கழிந்து முகத்தை கழுவி விடலாம். இவ்வாறு தொடர்ந்து செய்யும் பொழுது முகச்சுருக்கம் சரியாகும்.