நாம் வேண்டாம் என்று ஒதுக்கும் மணத்தக்காளி கீரையில் இத்தனை பயன்கள் அடங்கி இருக்கா?

0
141
#image_title

நாம் வேண்டாம் என்று ஒதுக்கும் மணத்தக்காளி கீரையில் இத்தனை பயன்கள் அடங்கி இருக்கா?

நாம் உண்ணும் உணவு ஆரோக்யமானதாக இருத்தல் அவசியம்.ருசிக்காக உண்பதை தவிர்த்து உடல் நலனைக் கருத்தில் கொண்டு சத்துள்ள உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். அப்பொழுது தான் நம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.

நம் உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி தருவதில் கீரைகளுக்கு முக்கிய பங்கு இருக்கிறது.கீரைகளில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள்,தாதுக்கள் நிறைந்து இருப்பதால் அவற்றை உண்ணுவதன் மூலம் பல நோய் பாதிப்புகளில் இருந்து எளிதில் தப்பிவிட முடியும்.

கீரைகளில் அகத்தி,சிறு கீரை,முருங்கை கீரை,வெந்தயக்கீரை,முளைக்கீரை,மணத்தக்காளி கீரை,பாலக் கீரை என்று பல வகைகள் இருக்கிறது.இந்த கீரைகளை வாரத்தில் 2 அல்லது 3 முறை எடுத்து வருவது மிகவும் அவசியம்.இந்த கீரைகளில் அதிக மருத்துவ குணம் கொண்ட மணத்தக்காளி கீரை பற்றிய தொகுப்பு இதோ.

மணத்தக்காளி கீரையின் பயன்கள்:-

இந்த கீரையில் வைட்டமின் இ,டி,நீர்ச்சத்து,தாது உப்பு,புரோட்டின் உள்ளிட்டவை நிறைந்து இருக்கிறது

*மலச்சிக்கல் பாதிப்பு இருப்பவர்கள் மணத்தக்காளி கீரையை உணவாக எடுத்து வருவது நல்லது.அதேபோல் வயிற்று போக்கு,குடல் புண்,வயிறு எரிச்சல்,அல்சர்,குடற் புழு உள்ளிட்ட வயிறு சம்மந்தமான பிரச்சனைகளுக்கு இந்த கீரை சிறந்த தீர்வாக இருக்கும்.

*அடிக்கடி மணத்தக்காளி கீரையை உணவில் சேர்த்து வருவதன் மூலம் கண்பார்வை தெளிவு பெறும்.கண் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் நீங்கும்.

*இருமல்,இளைப்பு உள்ளிட்ட பாதிப்பு இருப்பவர்கள் மணத்தக்காளி கீரையை சமைத்து சாப்பிடுவதன் மூலம் நல்ல தீர்வு கிடைக்கும்.

*உடல் சூடு,சிறுநீர் தொற்று,சிறுநீர்பை எரிச்சல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு இந்த மணத்தக்காளி கீரை சிறந்த தீர்வாக இருக்கும்.மணத்தக்காளி கீரையை சிறு துண்டு இஞ்சியுடன் அரைத்து சாப்பிட்டு வருவதன் மூலம் சிறுநீர் தொற்று குணமாகும்.

*காச நோய் பாதிப்பு இருப்பவர்கள் மணத்தக்காளி கீரையில் உள்ள பழத்தை சாப்பிடுவதன் மூலம் விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும்.

*காது வலி இருப்பவர்கள் மணத்தக்காளி கீரையை அரைத்து சாறு பிழிந்து அதை காதுகளில் விடுவதன் மூலம் தற்காலிக தீர்வு கிடைக்கும்.

*இந்த கீரை புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்கிறது.இதை அடிக்கடி சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது.