Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தினமும் நடைப்பயிற்சி செய்தால் இவ்வளவு நன்மைகளா!!? அப்போ இன்னைக்கு இருந்து நடைப்பயிற்சியை தொடங்குங்க!!!

#image_title

தினமும் நடைப்பயிற்சி செய்தால் இவ்வளவு நன்மைகளா!!? அப்போ இன்னைக்கு இருந்து நடைப்பயிற்சியை தொடங்குங்க!!!

தினமும் நாம் காலையிலும் மாலையிலும் நடைப்பயிற்சி செய்வதால் நம் உடலுக்கு கிடைக்கக் கூடிய நன்மைகள் எவ்வளவு என்பது பற்றி இந்த பதிவில் மூலமாக தெரிந்து கொள்வோம்.

நம்மில் பலரும் சில காரணங்களுக்காக மட்டுமே நடைப்பயிற்சி மேற்கொள்வோம். அந்த சில பயிற்சிகளில் முக்கியமானது உடல் எடையை குறைப்பது ஆகும். உடல் எடையை குறைப்பதற்கே நாம் பலரும் நடைபயிற்ச்சி மேற்கொண்டு வருகிறோம்.

சர்க்கரை நோய் உள்ள சிலர் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த நடைப்பயிற்சி மேற்கொள்வார்கள். ஒரு சிலர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைப்பதற்கு நடைப்பயிற்சி மேற்கொள்வார்கள். இன்னும் சிலர் மன அழுத்தமாக இருந்தால் அதை குறைக்கவும் நடைப்பயிற்சி மேற்கொள்வது வழக்கம் ஆகும்.

ஆனால் நடை பயிற்சி செய்வதால் மேற்கூறிய நன்மைகள் மட்டுமே கிடைக்கின்றது என்று சிலர் நடைப்பயிற்சி மேற்கொள்கிறார்கள். சிலர் நமக்கு எதுவும் இல்லை ஏன் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்று நினைத்து நடைப்பயிற்சி மேற்கொள்ளாமல் இருப்பார்கள். இந்த மாதிரியான நபர்களுக்கு நடைப்பயிற்சியின் மூலம் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிவது இல்லை. இந்த பதிவில் நடைப்பயிற்சி மேற்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

நடைப்பயிற்சி மேற்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்…

* நடைப்பயிற்சி மேற்கொள்வதால் உடல் எடை அதிகமாக இருக்கும் நபர்களுக்கு உடல் எடை குறைகின்றது.

* நடைப்பயிற்சி செய்வதன் மூலமாக டிமென்ஷியா பிரச்சனையை குறைக்கலாம்.

* நடைப்பயிற்சி மேற்கொள்வதன் மூலமாக நுரையீரல் செயல்படும் திறனை அதிகரிக்கலாம்.

* முன்பு கூறியதை போல நடைப்பயிற்சி மேற்கொள்வதால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வைக்கலாம். மேலும் சர்க்கரை நோயின் அபாயத்தை குறைக்கலாம்.

* நடைப்பயிற்சி செய்வதன் மூலம் இதய ஆரோக்கியம் மேம்படும்.

* நடைப்பயிற்சி செய்வதன் மூலமாக செரிமானம் விரைவாக நடக்கின்றது.

* நடைப்பயிற்சி செய்வதன் மூலமாக நாள்பட்ட நோய்கள் அனைத்தையும் குறைக்கலாம்.

* பெண்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் அவர்களுக்கு பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை குறைக்க முடியும்.

* நடைப்பயிற்சி மூலமாகவும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.

* முன்பு கூறியதை போலவே நடைப்பயிற்சி செய்வதன் மூலமாக இரத்த அழுத்தத்தை குறைக்கலாம்.

* நடைப்பயிற்சி மேற்கொள்வதன் மூலமாக சுருள் சிரை நாளங்களை மேம்படுத்தலாம்.

* நடைப்பயிற்சி மேற்கொள்வதன் மூலமாக முதுமையை தள்ளிப்போட்டு இளமையுடன் இருக்க உதவி செய்கின்றது.

* நடைப்பயிற்சி செய்வதன் மூலமாக புற்றுநோய் உருவாகாமல் தடுக்கலாம்.

* நடைப்பயிற்சி செய்வதன் மூலமாக வயதான காலத்தில் ஏற்படும் இயலாமையை தடுக்கலாம்.

* நடைப்பயிற்சி செய்வதன் மூலமாக மன அழுத்தத்தை குறைத்து மனநிலை மேம்படும்.

Exit mobile version