அடிக்கடி கைகளில் நெட்டி(நெட்டை) எடுப்பதால் இத்தனை பின்விளைவுகளா? மக்களே உஷார்!!

0
225
#image_title

அடிக்கடி கைகளில் நெட்டி(நெட்டை) எடுப்பதால் இத்தனை பின்விளைவுகளா? மக்களே உஷார்!!

கைகள், கால்களில் அடிக்கடி நெட்டை(நெட்டி) எடுக்கும் பழக்கம் நம் அனைவருக்கும் இருக்கும். ஏன் நெட்டை எடுக்கிறோம் என்று தெரியாமலும் இதனால் என்ன ஆபத்து ஏற்படும் என்பதும் தெரியாமல் இருக்கிறோம்.

நெட்டை(நெட்டி) என்பது விரல்களில் இருக்கும் இரண்டு எலும்புகளின் இணைப்புகள் மோதும்போது ஏற்படும் சத்தம் தான். இந்த பதிவில் அடிக்கடி நெட்டை எடுப்பதால் என்னென்ன ஆபத்துகள் இருக்கிறது என்பதை பார்க்கலாம்.

* அடிக்கடி நெட்டை(நெட்டி) எடுப்பதால் சினோவியல் எனப்படும் மூட்டுறை திரவம் சுரக்கிறது. இந்த சினோவியல் திரவம் விரல் எலும்புகளில் படிவதற்கு முன்னரே வாயுவினை ஏற்படுத்துகிறது.

* நாம் அடிக்கடி நெட்டை(நெட்டி) எடுப்பதால் விரல்களின் இணைப்புகளை சுற்றி இருக்கும் சதைகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

* அடிக்கடி நெட்டை(நெட்டி) எடுப்பது நரம்புகளின் வளர்ச்சியை பாதிக்கின்றது. இதனால் பக்கவாதம் ஏற்படவும் அதிக வாய்ப்புகள் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றது.

* அடிக்கடி நெட்டை(நெட்டி) எடுப்பதால் கைகளில் உள்ள வலிமை குறைவதோடு பாதிக்கவும் செய்கிறது.

* எப்போதாவது ஒரு முறை நெட்டை(நெட்டி) எடுக்கலாம். ஆனால் தினமும் நெட்டை எடுப்பது பாதிப்பை ஏற்படுத்தும்.