அதிக சுவை மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இயற்கை பானமாக இளநீர் திகழ்கிறது.வயிறு சார்ந்த பாதிப்புகளை சரி செய்ய இளநீர் சிறந்த தீர்வாக இருக்கின்றது.இளநீரில் இயற்கையான குளிர்ச்சி தன்மை இருப்பதால் உடல் சூடு,வயிறு எரிச்சல் போன்றவற்றை சரி செய்ய உதவுகிறது.
வெயில் காலத்தில் இளநீர் குடிக்க வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரை.இதில் அதிகளவு பொட்டாசியம் சத்து நிறைந்திருக்கிறது.ஆனால் அனைவருக்கும் இளநீர் ஏற்றதல்ல.ஒரு சிலருக்கு இளநீர் குடிப்பதால் உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
சிறுநீரக பிரச்சனை இருப்பவர்கள் இளநீரை அதிகளவு எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். இதனால் சில பக்கவிளைவுகள் ஏற்படக் கூடும்.இளநீர் குடிப்பதால் சிலருக்கு சீரற்ற இதயத் துடிப்பு ஏற்படக் கூடும்.
இளநீரில் உள்ள கலோரி உடல் எடையை அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.செயற்கை பானங்களை காட்டிலும் இதில் கலோரி குறைவு என்றாலும் உடல் பருமனாக இருப்பவர்கள் இளநீரை அதிகம் எடுத்துக் கொள்ள கூடாது.
இயற்கையாகவே இளநீரில் சர்க்கரை சத்து உள்ளது.சர்க்கரை நோயாளிகள் இளநீரை அதிகளவு அருந்தினால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு அதிகரித்து கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்.இளநீர் குடிப்பதால் சிலருக்கு சரும அலர்ஜி ஏற்பட வாய்ப்பிருக்கிறது.சிலருக்கு தேங்காய் அலர்ஜியை ஏற்படுத்திவிடும்.ஒவ்வாமை பாதிப்பு இருப்பவர்கள் குடல்,இரைப்பை,சுவாசம் தொடர்பான பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.
வயிறுப்போக்கு,அல்சர்,நெஞ்செரிச்சல்,உடல் சூடு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு இளநீர் சிறந்த தீர்வாக இருந்தாலும் அதை ஆளாக குடிப்பதே உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.