Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வீட்டு சுவரில் அதிகளவு பல்லி இருக்கிறதா? கவலையை விடுங்கள்.. இதை ட்ரை பண்ணுங்க!! 100% தீர்வு கிடைக்கும்!!

#image_title

வீட்டு சுவரில் அதிகளவு பல்லி இருக்கிறதா? கவலையை விடுங்கள்.. இதை ட்ரை பண்ணுங்க!! 100% தீர்வு கிடைக்கும்!!

நாம் எவ்வளவு தான் வீட்டை சுத்தம் செய்து வைத்தாலும் பல்லிகள் நடமாடுவதை மட்டும் தடுக்க முடியாது நிலை தான் இருக்கிறது.பல்லிகள் பார்ப்பதற்கு அருவுறுப்பாகவும்,பயத்தை ஏற்படுத்தும் விதமாகவும் இருக்கும்.

இந்த பல்லிகள் நாம் உண்ணும் உணவில் விழுந்து விட்டால் அவை நமக்கு பாய்சனாக மாறி உயிருக்கு உலை வைத்து விடும்.எனவே வீட்டில் உள்ள பல்லிகள் அனைத்தையும் முழுவதுமாக விரட்டுவது நல்லது.இதற்கு வீட்டில் உள்ள சில பொருட்களை பயன்படுத்தி தீர்வு காணலாம்.

தீர்வு 1:

தேவையான பொருட்கள்:-

*காபி தூள் – 1 தேக்கரண்டி

*தண்ணீர் – சிறிதளவு

செய்முறை:-

ஒரு தட்டில் 2 தேக்கரண்டி காபித்தூள் கொட்டி கொள்ளவும்.பின்னர் அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.

இதை பல்லி நடமாட்டம் இருக்கும் இடத்தில் வைத்து விடவும்.இதை பல்லிகள் உண்டால் உடனடியாக இறந்து விடும்.

தீர்வு 2:

தேவையான பொருட்கள்:-

*பூண்டு – 1

*தண்ணீர் – 1 டம்ளர்

செய்முறை:-

ஒரு மிக்ஸி ஜாரில் 1 பூண்டு போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.பின்னர் அதில் 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு கலக்கி கொள்ளவும்.

இதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி பல்லி நடமாட்டம் இருக்கும் இடத்தில் தெளித்து விடவும்.இவ்வாறு செய்வதன் மூலம் வீட்டில் உள்ள பல்லிகள் வெளியேறி விடும்.

தீர்வு 3:

தேவையான பொருட்கள்:-

*பூண்டு – 6 பற்கள்

*பெரிய வெங்காயம் – பாதி அளவு

*எலுமிச்சை பழச்சாறு – 2 தேக்கரண்டி

*டெட்டால் – 2 தேக்கரண்டி

செய்முறை:-

முதலில் ஓரு பவுல் எடுத்து கொள்ளவும்.அதில் 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொள்ளவும்.பின்னர் டெட்டால் 2 தேக்கரண்டி அளவு எடுத்து அதில் சேர்க்கவும்.

பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் பெரிய வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து அரைத்து சாறு பிழிந்து எடுத்து கொள்ளவும்.

அந்த சாற்றை டெட்டால் கலந்து வைத்துள்ள தண்ணீரில் சேர்க்கவும்.பின்னர் அதில் எலுமிச்சை பழச்சாறு 2 தேக்கரண்டி சேர்த்து நன்கு கலக்கவும்.இந்த கலவையை ஒரு ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி வீட்டில் பல்லிகள் நடமாட்டம் இருக்கும் பகுதிகளில் தெளிக்கவும்.இப்படி செய்தால் வீட்டில் பள்ளி தொல்லை இருக்காது.

Exit mobile version