தலைபாரம் மற்றும் மூக்கடைப்பு இருக்கின்றதா? உடனே இதனை செய்யுங்கள் போதும்!
தலைபாரம், மூக்கடைப்பு, தலைவலி, இருமல் போன்ற பிரச்சனைகளை எவ்வாறு சரி செய்யலாம் என்று இந்த பதிவு மூலம் காணலாம்
குளிர்காலங்களில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏற்படக்கூடிய பிரச்சனைகள் தலைபாரம், மூக்கடைப்பு, தலைவலி, இருமல், சளி, காய்ச்சல் போன்றவை ஏற்படுகிறது
இதனை வீட்டில் உபயோகப்படுத்தும் பொருள்களை வைத்து எவ்வாறு சரி செய்து கொள்ள முடியும் என்பதை இந்த பதிவின் மூலம் காணலாம்.துளசி இதில் உள்ள மருத்துவ குணங்கள் நம் உடலுக்கு பல்வேறு விதமான நன்மைகளை அளிக்கிறது.சித்த மருத்துவத்தில் அதிகமாக பயன்படுகிறது .
மிளகு இதில் உள்ள காரத்தன்மை நம் குரல் வளையங்களில் உள்ள கிருமிகளை அழித்து இருமல், மூக்கடைப்பு ஆகியவற்றை போக்க உதவுகிறது. வெற்றிலை இதில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நம் உடலில் உள்ள கெட்ட கிருமிகளை அழித்து உடலை சீராக வைத்திருக்க உதவுகிறது.
பொதினா இலைகள் மற்றும் ஒரு கையளவு துளசி இலைகள் இரண்டு வெற்றிலைகள், சிறிதளவு மிளகு, ஒரு கையளவு ஆகியவற்றை சரியான அளவு சேர்த்து மூன்று லிட்டர் தண்ணீரில் ஒரு மணி நேரம் நன்றாக காய்ச்சி அதனை வடிகட்டி ஆவி பிடிப்பதன் மூலமாக உடலில் உள்ள கழிவுகள் வியர்வை துவாரங்களில் வெளியேறி விடுகிறது.
இதன் காரணமாக உடலில் உள்ள கிருமிகள் முழுவதும் அழிகிறது. மற்றும் சளி, இருமல், காய்ச்சல், தலைபாரம், மூக்கடைப்பு அதிக பிரச்சனைகள் உடனடியாக தீர்ந்து விடும். ஒரு நாளில் இரண்டு வேலை இதனை செய்து வருவதன் மூலமாக எவ்வித பிரச்சனைகள் முழுமையாக குணமடையும்.