Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த மாதம் இவர்களுக்கு ஊதியம் இல்லை? காரணம் இதுதானா வெளிவந்த அதிருப்தி தகவல்!

Are they not getting paid this month? This is the reason for the dissatisfaction information that came out!

Are they not getting paid this month? This is the reason for the dissatisfaction information that came out!

இந்த மாதம் இவர்களுக்கு ஊதியம் இல்லை? காரணம் இதுதானா வெளிவந்த அதிருப்தி தகவல்!

கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.அந்த உத்தரவில் தமிழக பள்ளிக்கல்வித் துறையில் அரசாணை 151ன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களால் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் சுமார் 20 ஆயிரம் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கடந்த அக்டோபர் மாத சம்பளம் உள்ளிட்ட பணபலன்கள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து நவம்பர் 18 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்கம் சார்பில் அறிவிப்பு வெளியானது.அதனை தொடந்து பள்ளிக்கல்வி ஆணையகரத்தின் இணை இயக்குனர் மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கையில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊதியம் பெற்று தரும் வகையில் அவர்கள் விவரம் அனைத்தும் கருவூல வலைதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் நடப்பாண்டில் ஒவ்வொரு மாதமும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் ஊதியம் பெறுவதற்கு ifsrms என்ற தளத்தில் தகவல்களை 15 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை பதிவேற்றம் செய்ய வேண்டும்.ஆனால் இந்த மாதம் இரண்டு நாட்களிலேயே இந்த தளத்தில் அனுமதி மறுக்கப்பட்டது.மேலும் இது குறித்து பேசிய ஆசிரியை ஒருவர் இந்த ஆண்டு போதுமான நிதி இல்லை என்ற காரணத்தினால் இந்த தளத்தில் அனுமதி மறுக்கப்பட்டிருக்கும் என கூறினார்.அதன் காரணமாக இந்த மாதம் சம்பளம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுமோ என பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Exit mobile version