Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வெரிகோஸ் வெயின் நரம்பு சுருட்டலா? ஆபரேஷன் இல்லாமல் சரி செய்யும் எளிய முறை

வெரிகோஸ் வெயின் நரம்பு சுருட்டலா? ஆபரேஷன் இல்லாமல் சரி செய்யும் எளிய முறை 

1. மஞ்சள் ஒரு டீஸ்பூன், கருந்துளசி இலை ஒரு கைப்பிடி, வசம்பு – 3 துண்டு, கற்றாழை நுங்கு – தேவைக்கேற்ப எடுத்துக் கொள்ள வேண்டும். வசம்பை அப்படியே மிக்ஸியில் போட்டு பொடித்தால் மிக்ஸி ப்ளேடு உடையக்கூடும். அதனால் வசம்பை அம்மியில் வைத்து நசுக்கி பிறகு கருந்துளசி இலைகள் ஒரு கைப்பிடி சேர்த்து  நீர்விடாமல் கற்றாழை ஜெல் சேர்த்து மிக்ஸியில் போட்டு மைய அரைக்க வேண்டும். பிறகு மஞ்சள் தூள் இந்த கலவையில் சேர்க்க வேண்டும்.

இதை நரம்பு சுருட்டல் இருக்கும் இடங்களில் தடவி காய வைக்க வேண்டும். தொடர்ந்து ஒரு மாதம் வரை பொறுமையாக இதை செய்து வர வேண்டும். அப்படி செய்துவந்தால் முதலில் வீக்கமும், பிறகு வலியும், படிப்படியாக குறைந்து நரம்பு சுருட்டல் விலகும்.

2. சுத்தமான மண் மற்றும் எறும்பு புற்று மண் ஆகிய இரண்டையும் தண்ணீர் விட்டு குழைத்து நரம்பு முடிச்சு இருக்கும் இடத்தில் தடவி ஒரு மணி நேரம் கழித்து கழுவி வந்தால் நரம்பு சுருட்டல் சரியாகும். மேலும் அதிக வலி, வீக்கம், நரம்பு வலி குறைவதை காணலாம்.

 

Exit mobile version