புத்தாண்டில் வாகனங்களின் விலை உயர்த்தப்படுகிறதா?

0
156

 

வாகனங்கள் தயாரிப்பதற்கு தேவையான மூலப்பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் வாகனத்தின் விலையையும் உயர்த்தி விற்கலாம் என்று வாகன உற்பத்தியாளர்கள் ஆலோசித்து வருகின்றனராம்.

வாகனம் உற்பத்தி செய்வதற்கு தேவையான மூலப்பொருட்களின் விலை அதிகரித்து உள்ளதால் உற்பத்தி செலவினம் ஆனது அதிகரித்துள்ளது. இதன் காரணத்தினால் வாகனம் தயாரிப்பதில் முன்னணி நிறுவனங்களான சுஸுகி, மஹிந்திரா & மஹிந்திரா மற்றும் ஹீரோ போன்ற நிறுவனங்கள் வருகின்ற புத்தாண்டு முதல் வாகன விலையை உயர்த்த உள்ளதாக கூறியுள்ளனர்.

மேலும் பஜாஜ், ராயல் என்ஃபீல்டு ஆகிய நிறுவனங்கள் கடந்த தீபாவளி பண்டிகையின் போது ஏற்கனவே வாகனத்தின் விலையை உயர்த்தியுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

ஆனால் தீபாவளி பண்டிகை காலத்தின் போது வாகன நிறுவனங்கள், வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்த அளவிற்கு விலையில் தள்ளுபடியை வழங்காத காரணத்தினால் வாகன விற்பனையும் சொல்லிக்கத்தக்க அளவிற்கு அதிகரிக்கவில்லை.

மூலப் பொருள்களின் விலை உயர்வினால் வாகனத்தின் விலையை உயர்த்தினால் வாகன உற்பத்தி ஆனது மேலும் சரிய கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் முதல் பிஎஸ்6 என்ற தரம் கட்டாயமாக்க பட்டதால் வாகனத்தின் விலை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.