பெண்களே முகத்தில் தாடி வருகின்றதா? அப்போ சூடான பாலில் மஞ்சள் தூளை சேர்த்து இப்படி பயன்படுத்துங்க!
பெண்களின் முகத்தில் தேவையற்ற முடிகள் வருகின்றது. அதற்கு காரணம் அவர்களின் செல்கள் தான். அதாவது பெண்களின் உடலில் ஆண் தன்மையை அதிகரிக்கக் கூடிய டெஸ்டோஸ்டிரோன் என்ற ஹார்மோன் அதிக அளவு சுரப்பதால் பெண்களின் முகத்தில் அதிக அளவு முடி வளர்கின்றது.
இதற்கு ஆங்கில மருத்துவத்தில் சிகிச்சை இருக்கின்றது. இருப்பினும் இந்த பிரச்சனையை எளிமையாக சரி செய்ய இயற்கையான. முறையில் பல வைத்தியங்கள் இருக்கின்றது. அதில் ஒன்றை பற்றி பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்…
* பால்
* மஞ்சள்
* தேன்
செய்முறை…
முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் பாத்திரம் ஒன்றை வைத்து அதில் பாலை ஊற்றி நன்றாக காய்ச்சிக் கொள்ள வேண்டும். பால் கொதித்த பின்னர் இதில் மஞ்சள் தூள் சிறிதளவும் தேன் சிறிதளவும் சேர்த்து லேசாக கொதிக்க வைக்க வேண்டும்.
லேசாக கொதித்த பின்னர் இதை ஆற வைக்க வேண்டும். பால் நன்றாக ஆறிய பின்னர் முகத்தில் தேய்க்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் பெண்களின் முகத்தில் வளரும் தேவையற்ற முடிகள் மீண்டும் வளராது.