Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பெண்கள் இதில்தான் அதிகம் கவனம் செலுத்துவார்களா? முழு விவரங்கள் இதோ!

பெண்கள் இதில்தான் அதிகம் கவனம் செலுத்துவார்களா? முழு விவரங்கள் இதோ!

ஒரு குடும்பத்தில் பெண் இருந்தால் மட்டுமே அந்த குடும்பம் முழுமையடையும்.அந்த வகையில் பெண் என்பவள் மகாலட்சுமி என கருதப்படுகிறாள். மேலும் வீட்டை பராமரிக்க ஆண்கள் உதவியாக இருந்தாலும், வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வதில் முழு பொறுப்பும், அக்கறையும் பெண்களிடத்தில்தான் உள்ளது. அந்த வகையில் பெண்கள் வீட்டு பூஜை அறை, சமையல் அறை, குளியலறை, இப்படியாக எல்லா இடங்களையும் சுத்தமாகப் பராமரித்து வருகிறார்கள். மேலும் குறிப்பாக பெண்கள் தங்களுக்காக பயன்படுத்திக் கொள்ளும் பொருட்களையும், அந்த பொருட்கள் வைக்கும் இடத்தையும் தனித்துவமாக காட்டுவார்கள். மேலும் அதிகமாக அக்கறை எடுத்தும் சுத்தமாகவும், பளபளப்பாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்.

மேலும் பெண்கள் என்றால் மகாலட்சுமி ஸ்வரூபம் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். மேலும் மகாலட்சுமி சுவரோரமாக பெண்கள் காட்சியளிக்க வேண்டுமென்றால், அவர்களுடைய ஆடை அணிகலன்கள் மிக மிக முக்கியம். அந்த வரிசையில் பெண்கள் தங்களை அழகுப்படுத்திக் கொள்ளும் கண்ணாடி வளையல், பொட்டு, குங்குமம், மஞ்சள், மருதாணி, முகம் பார்க்கும் கண்ணாடி இந்த பொருட்களை எல்லாம் வைப்பதற்கு என்று தனியாக ஒரு இடத்தை ஒதுக்கிக் கொள்ள வேண்டும்.

மேலும் சில பெண்கள் செயற்கையான பொருட்களை கொண்டு தங்களை அழகுபடுத்திக் கொள்வார்கள்.மேலும் அதெல்லாம் அவரவர் விருப்பம் , அவரவர் வசதிப்படி தங்களை அழகுப்படுத்திக் கொள்வார்கள். மேலும் பெண்கள் தங்களை அழகுப்படுத்திக் கொள்ளும் எல்லா விதமான பொருட்களையும் மொத்தமாக ஒரே இடத்தில் பத்திரப்படுத்தி வைத்து, அதற்கென்று தனியாக ஒரு இடத்தை ஒதுக்கி சுத்தமாக பராமரித்து வரவேண்டும்.

 

Exit mobile version